மும்பையில் மின்சார ரெயிலில் அடிபட்டு நடிகர் பலி

Bookmark and Share

மும்பையில் மின்சார ரெயிலில் அடிபட்டு நடிகர் பலி

மும்பையில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சர்ச்கேட்டில் இருந்து விரார் நோக்கி மின்சார ரெயில் ஒன்று சென்றபோது, காந்திவிலி- போரிவிலி ரெயில் நிலையங்களுக்கு இடையே முதியவர் ஒருவர் அடிபட்டு உயிரிழந்து கிடந்தார். அவரது உடல்கள் துண்டு, துண்டாக சிதறி கிடந்தன.


இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திவிலி பாபாசாகேப் அம்பேத்கர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


போலீசார் நடத்திய விசாரணையில், ரெயிலில் அடிபட்டு பலியானது பிரபல டி.வி. நடிகர் முகேஷ் ராவல்(வயது66) என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்தியில் வெளிவந்த ராமாயணம் தொடரில் விபீஷணனாக நடித்து புகழ் பெற்றவர் முகேஷ் ராவல். இதுமட்டுமின்றி அவர் பல இந்தி, குஜராத்தி டி.வி. தொடர்களில் நடித்து வந்தார். முகேஷ் ராவல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? என்பது தெரியவில்லை.


சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேஷ் ராவலின் மகன் ஆர்யா ஜெயேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 


Post your comment





Related News
மெரினா போராட்டக் குழுவினரின் கவனத்துக்கு ஒரு தகவல்!
விஜய் வில்லனுக்கு விரைவில் திருமணம்!
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் பட வில்லன்?
தயாரிப்பாளராகிறார் நீல் நிதின் முகேஷ்
தமிழில் டப்பிங் பேசிய கத்தி வில்லன் நீல் நிதின் முகேஷ்!
சென்னையில் பாலிவுட் நடிகருடன் விஜய் மோதல்
விஜய்க்கு வில்லனாக இந்தி நடிகர் நீல் நித்தின் முகேஷ்..!
விஸ்வரூபத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட அரச‌ வழக்குகள் வாபஸ்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions