திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: நடிகை பானு பேட்டி

Bookmark and Share

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: நடிகை பானு பேட்டி

'தாமிரபரணி' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த நடிகை பானு தற்போது 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நடிகை பானு மலையாள பின்னணி பாடகி ரிமிடோமியின் சகோதரரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான ரிங்கு டோமியை காதல் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களின் திருமணம் வருகிற 30–ந்தேதி கொச்சியில் நடக்கிறது.

இதுபற்றி நடிகை பானு நிருபர்களிடம் கூறியதாவது:–

எனது திருமணம் பெற்றோர் அனுமதியுடன் நடக்கும் காதல் திருமணம் ஆகும். ரிமிடோமியுடன் நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளேன். அந்த நிகழ்ச்சிகளை ரிமிடோமியின் சகோதரர் ரிங்குடோமிதான் செய்து வந்தார். இதில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அதுவே காதலாக மலர்ந்தது.

இருவரும் அதை உணர்ந்த பின்பு பெற்றோரிடம் தெரிவித்தோம். அவர்கள் அனுமதி கொடுத்த பின்பே எங்களின் திருமண அறிவிப்பு வெளியானது.

நான் திருமணம் செய்ய இருக்கும் ரிங்குடோமியின் குடும்பம் கலைக்குடும்பமாகும். ரிமிடோமி திருமணத்திற்கு பிறகுதான் ஏராளமான கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற்றார். எனவே நானும் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன். இதற்கு கணவரின் குடும்பம் ஆதரவாக இருக்கும். என்னால் முடியும்வரை திரையுலகை விட்டு வெளியேற மாட்டேன்.

எனது திருமணம் எளிய முறையில் நடக்கும். இப்போது எல்லோரும் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துகிறார்கள். அதில் எனக்கு விருப்பமில்லை. பாரம்பரிய உடை அணிந்து எளிமையாக திருமண சடங்குகள் நடக்கும். நெருங்கியவர்களை மட்டுமே விழாவிற்கு அழைக்க திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
கோச்சடையான் விவகாரத்தில் கோர்ட் சொன்னது என்ன?
தாமிரபரணி பானுவின் மகளா இது? என்னவொரு அழகு - புகைப்படம் இதோ.!
தாமிரபரணி பானுவா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
பிரபல நடிகை பானுப்ரியா வாழ்வில் ஏற்பட்ட சோகம் - கலங்க வைக்கும் தகவல்.!
இந்தி நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
சூரியகாந்தி படம் மீண்டும் வெளியாகிறது: டைரக்டர் முக்தா சீனிவாசன் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions