சூரியகாந்தி படம் மீண்டும் வெளியாகிறது: டைரக்டர் முக்தா சீனிவாசன் பேட்டி

Bookmark and Share

சூரியகாந்தி படம் மீண்டும் வெளியாகிறது: டைரக்டர் முக்தா சீனிவாசன் பேட்டி

தற்போதையை முதல்- அமைச்சர் ஜெயலலிதா, முத்துராமன், சோ, மனோரமா, எம்.ஆர்.ஆர்.வாசு, ஆகியோர் நடித்து 1973-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் சூரியகாந்தி, இந்த படத்தை முக்தா சீனிவாசன் டைரக்டு செய்து இருந்தார்.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது’ பாடலை கவிஞர் கண்ணதாசன் பாடி நடித்து இருந்தார். ‘ஓமேரே துல்ருபா’ பாடலை ஜெயலலிதாவும், ‘தெரியாதோ நோக்கு தெரியாதோ’ பாடலை நடிகை மனோரமாவும் சொந்த குரலில் பாடி இருந்தனர்.

‘நான் என்றால் அது அவளும் நானும்’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் ஜெயலலிதாவும் இணைந்து பாடி இருந்தனர். அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. இந்த படத்தின் 100-வது நாள் விழாவில் தந்தை பெரியார் கலந்து கொண்டு படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியகாந்தி படம் 43 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த படத்தை மீண்டும் வெளியிடுவது குறித்து டைரக்டர் முக்தா சீனிவாசன் கூறியதாவது:-

“நான் சினிமாவுக்கு வந்து 70 வருடங்கள் ஆகிவிட்டன. முதலாளி, தேன் மழை, நிறைகுடம், அருணோதயம், தவப்புதல்வன், அன்பைத்தேடி, அந்தமான் காதலி, இமயம், பொல்லாதவன், சிவப்பு சூரியன் உள்பட 42 படங்களை இயக்கி உள்ளேன். சூரிய காந்தி நான் இயக்கிய முக்கிய படங்களில் ஒன்று.

தன்னை விட மனைவி அதிகம் சம்பாதிப்பதை பார்த்து கணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வருகிறது. இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளே படத்தின் கதை. எல்லோரும் சிறப்பாக நடித்து இருந்தனர். ஏ.எஸ்.பிரகாசம் திரைக்கதை வசனம் எழுதி இருந்தார். இன்றைய கால கட்டத்துக்கும் பொருந்துகிற கதையம்சம் உள்ள படமாக இருக்கிறது. எனவேதான் மீண்டும் திரைக்கு கொண்டு வருகிறோம்.”
இவ்வாறு முக்தா சீனிவாசன் கூறினார்.


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முன்னணி காமெடி நடிகர் - மருத்துவமனையில் அனுமதி
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்
நடிகர் பவர்ஸ்டார் டெல்லி போலீசாரால் கைது
ஒரு பாட்டுக்கு நடனமாட நான் என்ன சிலுக்கா..? - பவர் ஸ்டார் சீனிவாசன் கேள்வி
அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு சேவை செய்வேன்: நடிகர் பவர்ஸ்டார்
கோஹினூர் வைரம் சம்பந்தமாக முக்தா V.சீனிவாசன் கோரிக்கை இங்கிலாந்து மீது இந்தியா வழக்கு!
அட்ரா மச்சான் விசிலு சூப்பர் ஸ்டாரை அவமதிக்கும் படம்?
25 வருடங்கள் கழித்து மீண்டும் படம் தயாரிக்கும் முக்தா V.சீனிவாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions