முல்லை, கோதண்டம் அடுத்த கவுண்டமணி-செந்தில்: ஒண்டிக்கட்ட இசைவெளியீட்டு விழாவில் பரணி பேச்சு

Bookmark and Share

முல்லை, கோதண்டம் அடுத்த கவுண்டமணி-செந்தில்: ஒண்டிக்கட்ட இசைவெளியீட்டு விழாவில் பரணி பேச்சு

`பெரியண்ணா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகமானவர் பரணி. `பார்வை ஒன்றே போதுமே', `சார்லி சாப்ளின்', `சுந்தரா டிராவல்ஸ்' உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், தற்போது `ஒண்டிக்கட்ட' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

பிரண்ட்ஸ் சினி மீடியா பட நிறுவனம் சார்பில், மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர்களுடன் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் இசையமைப்பாளர்கள் தீனா, எஸ்.ஏ.ராஜ்குமார், சத்யா, அம்ரீஷ், இயக்குநர்கள் சக்தி சிதம்பரம், மனோஜ்குமார், பாரதிகணேஷ், சாய்ரமணி, விஜய்சந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பரணி தெரிவித்ததாவது, ஒரு நல்ல கதை அமைந்ததால் `ஒண்டிக்கட்ட' படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறேன்.

ஒரு உண்மைக் கதையை நல்ல திரைக்கதையாக்கி அதை படமாக்கி இருக்கிறோம். தையமுத்து, நல்லதம்பி, பஞ்சவர்ணம் என்ற மூன்று கதாப்பாத்திரங்கள் கதையின் உயிர் நாடி. முல்லை, கோதண்டம் இருவரும் கவுண்டமணி - செந்தில் மாதிரி காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். பாடல்களுக்கு நானே இசையமைத்து இருக்கிறேன். பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பும் என்றார். 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions