பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் மரணம்!

Bookmark and Share

பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் மரணம்!

38 வயதில் ஹார்ட் அட்டாக் வருமா..? வந்திருக்கிறதே.. அதுதான் மலையாள நடிகரும், சிறந்த கதாசிரியருமான முரளிகோபியின் மனைவி அஞ்சனாவின் உயிரையும் பறித்துவிட்டது.

38 வயதான அஞ்சனா, ஸ்டேட் பாங்கில் அசிஸ்டன்ட் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர். நேற்று வழக்கம்போல தங்களது இரு குழந்தைகளை ட்யூசன் சென்டரில் விட்டுவிட்டு வீடு திரும்பிய அஞ்சனாவுக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதற்கு முன்பே உயிர் பிரிந்தது.

முரளிகோபி, அஞ்சனா தம்பதியினருக்கு பத்தாவது படிக்கும் கௌரி என்கிற மகளும் 2வது படிக்கும் கௌரவ் என்கிற மகனும் உள்ளனர். மறைந்த பிரபல நடிகர் பரத்கோபியின் மகன் தான் இந்த முரளி கோபி.

பெரும்பாலும் மீடியாகுள் முன்போ, அல்லது விழாக்களிலோ முரளிகோபி குடும்பத்துடன் கலந்துகொண்டது இல்லை. தற்போதுதான் மிக பிஸியாக படங்களில் நடித்தும், கதை எழுதியும் வருகிறார் முரளிகோபி.

இந்த இளம் வயதிலேயே அவரது மனைவியின் அதிர்ச்சி மரணம் அவரை மட்டுமல்ல, மலையாள திரையுலகையும் உலுக்கியுள்ளது. இன்று முற்பகல் அஞ்சனாவின்  உடல் தகனம் செய்யப்படுகிறது. 

 


Post your comment





Related News
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
பிரபல தயாரிப்பாளர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
பால முரளி கிருஷ்ணா உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
கர்நாடக இசை மேதை பால முரளி கிருஷ்ணா உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி
பாலமுரளி கிருஷ்ணா மரணம்: கருணாநிதி இரங்கல்
பாலமுரளிகிருஷ்ணா இழப்பை ஈடு செய்ய முடியாது: ஜெயலலிதா இரங்கல்
பாலமுரளி கிருஷ்ணா மறைவால் இசை உலகம் தனது கிரீடத்தை இழந்து விட்டது: கவிஞர் வைரமுத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions