முருகதாஸ் திரைக்கதையில் நடிக்கும் நர ரோஹித்

Bookmark and Share

முருகதாஸ் திரைக்கதையில் நடிக்கும் நர ரோஹித்

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகன் நர ரோஹித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அசுரா படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து ரோஹித்  அப்பட்லோ ஒகடுண்டேவாடு  என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

வசிஷ்டா பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை  அய்யரே படப் புகழ் இயக்குநர் சாகர் கே சந்திரா இயக்கி வருகின்றார். மேலும் முருகதாஸின் திரைக்கதையில் உருவாகும் படத்தில் ரோஹித் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

டோலிவுட்டில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து ஸ்டாலின் எனும் வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ஹிந்தியில் மௌனகுரு படத்தின் ரீமேக்கை இயக்கி வருகின்றார்.

இதற்கிடையில் ஸ்ரீ கீர்த்தி பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை எழுதுகின்றார். இப்படத்தை இயக்குநர்கள் ஜோரு மற்றும் குமார் நாகேந்திரா இயக்கவுள்ளனர். இப்படத்தின் பூஜை நேற்று முன் தினம் நடைபெற்றது. விழாவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


Post your comment





Related News
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தளபதி-62 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - பக்கா பிளானில் முருகதாஸ்.!
விஜய்யின் அடுத்த படம் பற்றிய புதிய அப்டேட்
முருகதாஸிற்கு உதவும் இளம் நடிகர்கள்
முருகதாஸ் பிரபல நடிகருடன் மோதலா? அடுத்து படம் தொடங்குமா?
அதர்வாவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!
ஏ.ஆர்.முருகதாஸை ஃபோன் செய்து கலாய்த்த விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions