ஏ.ஆர்.முருகதாஸ் புதிய படத்தின் பணிகள் தொடக்கம்

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸ் புதிய படத்தின் பணிகள் தொடக்கம்

விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த மூவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள்.இவர்கள் இணையும் அந்த புதிய படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். 

இந்த செய்திகள் அனைத்தும் ஏற்கெனவே முடிவாகிவிட்ட நிலையில், தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தற்போது தொடங்கியுள்ளனர். முருகதாஸ் தற்போது இந்தியில் ‘அகிரா’ படத்தில் பிசியாக இருக்கிறார்.

அதேபோல், மகேஷ் பாபு தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘பிரம்மோற்சவம்’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை தற்போது தொடங்கியிருக்கிறார்.

அதன்பிறகு முருகதாஸ், மகேஷ்பாபுவை வைத்து படப்பிடிப்பை விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முருகதாஸ்-ஹாரிஸ் ஜெயராஜ்-சந்தோஷ்சிவன் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதேபோல், இந்த படமும் பெரிய வெற்றியை தேடித்தரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


Post your comment





Related News
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தளபதி-62 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - பக்கா பிளானில் முருகதாஸ்.!
விஜய்யின் அடுத்த படம் பற்றிய புதிய அப்டேட்
முருகதாஸ் பிரபல நடிகருடன் மோதலா? அடுத்து படம் தொடங்குமா?
அதர்வாவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!
ஏ.ஆர்.முருகதாஸை ஃபோன் செய்து கலாய்த்த விஜய்!
சிம்புவை இயக்கும் முருகதாஸ்?
முருகதாஸிடம் கண்டிஷன் போட்ட மகேஷ்பாபு!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions