சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் பார்த்து பிரமித்த டீசர் இதுதான்!

Bookmark and Share

சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் பார்த்து பிரமித்த டீசர் இதுதான்!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றும் விஷால், வடிவேலு, தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் “ கத்திசண்டை “ படத்தையும் தயாரித்து வருகிறார் அந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. வீரசிவாஜி படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார்.

மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, எழுதி படத்தை இயக்கியுள்ளார் கணேஷ் விநாயக். படம் பற்றி இயக்குனர் கணேஷ் விநாயக் கூறியதாவது, ” படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைய உள்ளது.

இந்த படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் வெளியிட கேட்டபோது டீசரை பார்த்த அவர் உடனே அருமையாக உள்ளது டீசர் நான் கண்டிப்பாக வெளியிடுகிறேன் என்று வெளியிட்டார்.

டீசர் நன்றாக உள்ளது படம் நிச்சயமாக வெற்றியடையும் அது இந்த டீசரை பார்த்தாலே தெரிகிறது பட குழு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பாராட்டினார். அவர் பாராட்டியது போல படம் நிச்சயம் வெற்றியடையும்” என்றார்.

 


Post your comment





Related News
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதிப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தளபதி-62 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - பக்கா பிளானில் முருகதாஸ்.!
விஜய்யின் அடுத்த படம் பற்றிய புதிய அப்டேட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions