முருகதாஸ்க்கு இது அழகா.?!

Bookmark and Share

முருகதாஸ்க்கு இது அழகா.?!

சினிமாவில் ஒருவர் வெற்றி பெற்று விட்டாலோ பிரபலமடைந்து விட்டாலோஅவர் தனக்கு நண்பர், நெருங்கியவர், வேண்டியவர் என்று கூறுவது சகஜம். அவர் தோல்வியடைந்து விட்டால் இந்த நட்பு வட்டம் சுருங்கிவிடும்.

ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர்களிலிருந்து வருகிற ஒரு படம் என்று இருவர் ஒன்றானால் படத்துக்கு ஒரு விளம்பரம் வந்தது. அப்போது அது பற்றி இயக்குநர் சங்கத்துக்கெல்லாம் முறையிட்டு ஆட்சேபித்தார் முருகதாஸ். பிறகு அந்த விளம்பரம் தொடரவில்லை, நிறுத்தப்பட்டது. பிறகு படமும் வெளியானது.

படம் மிகவும் கண்ணியமான, யதார்த்தமான படம், மென்மையான காதல் கதை என்று ஊடகங்களால் பாராட்டப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர்களில் ஒருவர் ஏ.எம்.சம்பத்குமார் தான் படத்தின் தயாரிப்பாளர். இன்னொருவரான அன்புஜி என்பவர் இயக்கியிருந்தார். இருவரும் பொய் சொல்லவில்லை.

உதவி இயக்குநர்களாக முருகதாசிடம் பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால் வெளியே வரும்போது மன வருத்தத்தில் வெளியே வந்திருக்கிறார்கள். அதைக் காரணம் காட்டி அவர்கள் தன்னிடம் வேலை பார்க்காதவர்கள் போல அவமானப் படுத்திவிட்டாரே என்று குமுறுகிறார்கள் இருவரும்.

இதுபற்றிக் கேட்டால் நாங்கள் என்றும் அவர் பெயரைக் கெடுக்கும்படி நடந்து கொள்ள மாட்டோம், அப்படிப்பட்ட படமும் எடுக்க மாட்டோம். அவருக்குப் பதிலுக்குப் பதிலாக நாங்களும் பேசவோ நடந்து கொள்ளவோ விரும்பவில்லை " என்கிறார்கள் இருவரும் பெருந்தன்மையுடன்.

முருகதாஸுக்கு தாங்கள் அளிக்கும் பதிலாக  இருவர் ஒன்றானால் படம் பற்றிய பாராட்டுகளே போதும் என்று கருதுகிறார்கள். தன் உதவி இயக்குநர்களுக்கு பெருந்தன்மையுடன் தயாரிப்பாளரைச் சொல்லிவிடும் முருகதாஸ் இவர்கள் விஷயத்தில் மட்டும் முரண்பட்டு அந்த முறையிலிருந்து தவறிய முருகதாஸ் ஆகி விட்டாரே ஏன்? அது அவருக்கு அழகா என கோடம்பாக்கத்தில் கேட்கிறார்கள்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions