துப்பாக்கி, கஜினி போல் முருகதாஸின் புதிய கூட்டணி!

Bookmark and Share

துப்பாக்கி, கஜினி போல் முருகதாஸின் புதிய கூட்டணி!

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு , ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளிவந்த ‘செல்வந்தன்’ படம் பெரிய வெற்றிக்கு பின் தற்போது ‘பிரம்மோற்சவம்’ என்ற படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகிவருகிறது.

மகேஷ்பாபு தற்போது நேரடித் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. முருகதாஸ் தற்போது இந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ‘அகிரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் முடியும் நிலையில் உள்ளது. இப்படம் முடிந்த பிறகு, மகேஷ்பாபு , ஸ்ருதி இணையும் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது. இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக உள்ளது.

மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பளராக உறுதி செய்யப்பட்டுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் ஏற்கனவே கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு என பாடல்கள் மிகப்பெரும் ஹிட்டானது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி ஒன்று கூடியுள்ளது. மகேஷ் பாபு, ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ், ஜெயராஜ், ஸ்ருதி ஹாசன் இந்த புதிய கூட்டணிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions