முருகதாஸ்- மகேஷ்பாபு படத்தில் மாற்றமா?

Bookmark and Share

முருகதாஸ்- மகேஷ்பாபு படத்தில் மாற்றமா?

முருகதாஸ் இப்போது மௌனகுரு படத்தை இந்தியில் எடுத்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறது.

இந்தப்படத்தைத் தொடர்ந்து அவர் தெலுங்கு முன்னணிநடிகர் மகேஷ்பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரு படத்தை எடுக்கத்திட்டமிட்டிருக்கிறார். மகேஷ்பாபு இப்போது பிரமோற்சவம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படம் இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று சொல்லப்பட்டது, அதுபோலவே நடந்துகொண்டிருக்கிறதாம். 

ஜனவரியிலிருந்து முருகதாஸ் மகேஷ்பாபு ஆகிய இருவரும் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. திட்மிட்டபடியே படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்தப்படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். 

அந்தப்படத்துக்குப் பெயரையும் முடிவுசெய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். எனிமி என்று பெயர் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தெலுங்கில் ஆங்கிலத் தலைப்பு வைத்தால் சிக்கல் இல்லை.

தமிழில் அப்படி வைக்கமுடியாது. ஆனாலும் இப்படி ஒரு பெயரை முடிவு செய்திருக்கிறார்கள் என்றால் படத்தைத் தெலுங்கில் மட்டும்தான் எடுக்கிறார்களா? என்கிற கேள்வி எழுகிறது.

 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions