மலையாள நடிகர் முருகேஷ் காக்கூர் மரணம்!

Bookmark and Share

 மலையாள நடிகர் முருகேஷ் காக்கூர் மரணம்!

கேரள மாநிலம் கொச்சி காக்கூரை சேர்ந்தவர் முருகேஷ் காக்கூர் (வயது 47). இவர் மலையாள திரைப்படங்களிலும், டி.வி. தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்.

மேலும் ஏராளமான நாடகங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் நடிகர் முருகேஷ் காக்கூர் கல்லீரல் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை முருகேஷ் காக்கூர் உயிர் இழந்தார். முருகேஷ் காக்கூர் 2012–ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமியின் சிறந்த நடிகருக்கான விருது பெற்றவர்.

மேலும் காயங்குளம் கொச்சுண்ணி, தேவராகம், விருந்தாவனம் ஆகிய புகழ்பெற்ற டி.வி. தொடர்களில் நடித்து உள்ளார். இவர் கடைசியாக ‘சாய்கள்படுகயானு’ என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் முருகேஷ் காக்கூர் மரணமடைந்த தகவல் கிடைத்ததும் மலையாள திரையுலக நட்சத்திரங்களும், டி.வி. தொடர் கலைஞர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions