இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!

Bookmark and Share

 இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!

மறைந்த இந்திப்பட இசையமைப்பாளர் ராகுல்தேவ் பர்மனின் 77-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுளின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.

இந்திப் படவுலகில் 1970-80 ஆண்டுவாக்கில் இசை சாம்ராஜ்ஜியம் நடத்திய ஆர்.டி.பர்மன் என்னும் ராகுல்தேவ் பர்மன் சுமார் 330 படங்களில் இசையமைத்து தனது காலத்தால் அழிக்க முடியாத திரைஇசை மெட்டுகளால் கோடானுக்கோடி இந்தியர்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளார்.

தனித்துவம் மிக்க இவரது குரலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது. குறிப்பாக, இவரது குரலில் வெளியான ‘ஷோலே’ படத்தின் ‘மெஹபூபா ஓ மெஹபூபா’ பாடல் இந்தியாவின் பட்டித்தொட்டிகளில் வாழ்ந்த மக்கள்கூட கூத்தாட வைத்தது. இதேபோல், ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ படத்தில் இவரது இசையமைப்பில் இடம்பெற்ற ‘தம் மாரோ தம்’ பாடலுக்காகவே அப்படத்தின் இசைத்தட்டுகள் விற்பனையில் மகத்தான சாதனை படைத்தது

பிரபல இந்திப் பாடகி ஆஷா போஸ்லேவை திருமணம் செய்து, பின்னர் விவாக ரத்தான பர்மனின் இசையில் உருவாகி, முஹம்மது ரபி, கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே ஆகியோர் பாடிய பல பாடல்கள் சிரஞ்சீவித்தனமாக சுமார் ஐம்பது ஆண்டுகளாகியும் ரசிகர்களின் செவிகளிலும், நெஞ்சங்களிலும் இன்றும் நீங்காமல் ரீங்காரமிடுகிறது.

நடிகர் ராஜேஷ் கண்ணாவின் 40 படங்களுக்கு இசையமைத்த இவரை இந்திப்பட உலகினர் ‘பஞ்சம் டா’ என்று அன்புடன் அழைத்து மகிழ்ந்தனர். 4-1-1994 அன்று தனது 54-வது வயதில் மரணம் அடைந்த ஆர்.டி. பர்மனின் நினைவை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளான ஜுன் 27-ம் தேதியான இன்று அவரது புகைப்படம் கொண்ட ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது.


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions