கலருக்காக காத்திருக்கும் இயக்குநர்!

Bookmark and Share

கலருக்காக காத்திருக்கும் இயக்குநர்!

அமர்க்களம், வாலி படங்களில் நடித்த காலகட்டத்தில் தன்னை வைத்து வெற்றிப்படம் கொடுக்கும் இயக்குநர்களுக்கு கார் பரிசளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் அஜித். அமர்க்களம் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இயக்குநர் சரணுக்கு கார் பரிசளித்தார் அஜித்.

வாலி படத்தை இயக்கி எஸ்.ஜே.சூர்யாவுக்கும் அஜித்திடமிருந்து கார் பரிசாகக் கிடைத்தது. அதன் பிறகு ஏனோ அந்த வழக்கத்தை நிறுத்திவிட்டார் அஜித்காதலன் படம் ஹிட்டானபோது அதன் இயக்குநர் ஷங்கருக்கு மாருதி 1000 கார் வாங்கிக் கொடுத்தார் தயாரிப்பாளர் குஞ்சுமோன்.

திருடா திருடி என்ற படத்தை வெற்றிப்படமாக்கிய சுப்பிரமணியசிவாவுக்கு ஸ்கார்பியோ கார் வாங்கிக் கொடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்.

இந்த வரிசையில் கொம்பன் பட இயக்குநர் முத்தையாவுக்கு  இன்னோவா கார் ஒன்றை பரிசளித்துள்ளார் ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா. கார்த்தியின் கொம்பன் படம் பட்டி தொட்டியெங்கும் வெற்றிபெற்று வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.  

இதனால் கொம்பன் படக் குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்! இந்தப் படத்திற்கு முதலில் வந்த சில எதிர்ப்புகள், தடைகளை தாண்டி ;கொம்பன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் இப்படத்தை இயக்கிய முத்தையாவுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக இன்னோவா கார் கிடைத்திருக்கிறது.

எனவே டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார்முத்தையா!  முத்தையாவுக்கு பிடித்த கலரில் கார் உடனே கிடைக்கவில்லை. எனவே தான் விரும்பிய கலரில் இன்னோவா கார் வரும்வரை காத்திருப்பதாக சொல்லிவிட்டாராம்.


Post your comment





Related News
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ஏமாற்றிய சூர்யா? முத்தையா எடுத்த அதிரடி முடிவு
விஷாலுடன் இணைந்த ராதாரவி...!
கொம்பன் கதைக்கு உரிமை கொண்டாடும் உதவி இயக்குநர்
குடும்ப உறவுகளைச் சொல்லும் \'கொம்பன்\'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions