மலேசிய கலைஞர்களின் முத்துக்குமார் வாண்டட்

Bookmark and Share

மலேசிய கலைஞர்களின் முத்துக்குமார் வாண்டட்

மலேசியாவைச் சேர்ந்த கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் முத்துக்குமார் வாண்டட். சரண், நிஷிரா ஹீரோ, ஹீராயினாக நடித்துள்ளனர், சுந்தரா இசை அமைத்துள்ளார், எம்.ஜி.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், எம்.பத்மநாபன் இயக்கியுள்ளார்.

முனியாண்டி கேசவன், வேல் சரவணன் தயாரித்துள்ளனர். அனைவருமே மலேசியாவைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் நிழல்கள் ரவி, பாத்திமாபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட தமிழ்நாட்டு கலைஞர்களும் பணியாற்றி உள்ளனர்.

"சென்னையில் பெற்றோருடன் வசித்துவரும் ஆனந்திக்கு சிறுவயது முதல் முத்துக்குமார் என்ற பெயரில் பல பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கிறது. முத்துக்குமார் யார் என்று தெரியாதபோதிலும் மகிழ்ச்சியுடன் அந்த பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்கிறாள் ஆனந்தி. முத்துக்குமாரை பல முறை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை.

இந்நிலையில் வளர்ந்து ஆளான ஆனந்திக்கு நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அன்றையதினம் ஒரு பரிசுப்பெட்டியை அனுப்பிய முத்துக்குமார் அதனுள் விலை உயர்ந்த பரிசு பொருள் இருப்பதாகவும், அதனுடைய சாவி தன்னிடம் இருப்பதாகவும், தான் மலேசியா செல்லவிருப்பதால் ஏர்போர்ட் வந்து சாவியை பெற்றுக்கொள்ளும்படி ஒரு கடிதத்தையும் இணைத்துள்ளார்.

அப்படி ஏர்பபோர்ட் வரத்தவறினால் மலேசியா வந்து பெற்றுக்கொள்ளவும்   என்று கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனந்தி ஏர்போர்ட் செல்கிறாள். ஆனால் அதற்கு முன்பே முத்துக்குமார் மலேசியா சென்று விடுகிறான்.

திருமணத்திற்கு ஐந்து நாட்கள் உள்ள நிலையில் தந்தையின் அனுமதி பெற்று முத்துக்குமாரைத் தேடி மலேசியா செல்கிறாள் ஆனந்தி, அங்கு அவளுக்கு ஏற்படும் சுவையான சம்பவங்களையும், அவள் முத்துக்குமாரை சந்தித்தாளா ? அந்த பெட்டகத்தின் சாவியை பெற்றுக்கொண்டாளா என்பதையும் நகைக்சுவை கலந்து சொல்லும் படம்" என்கிறார் இயக்குனர் பத்மநாபன்.


Post your comment





Related News
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
வல்லதேசம் இசையமைப்பாளரின் இசை ஆல்பத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு
‘மேல்நாட்டு மருமகன்’ படத்துக்காக 33 நிமிடத்தில் பாட்டெழுதி தந்த நா.முத்துக்குமார்
எங்களை கஷ்டப்படுத்தாதீர்கள் – நா.முத்துக்குமாரின் சகோதரர் உருக்கமான கடிதம்!
நா.முத்துக்குமார் குறித்து உருக்கமாக பேசிய சூர்யா!
மரணத்திற்கு முன் மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதிய உருக்கமான கடிதம்!
2015-ஆம் ஆண்டில் 33 படங்களில் 94 பாடல்கள் நா.முத்துக்குமார் சாதனை
சர்வதேச எழுத்தாளர்கள் திருவிழாவில் நா.முத்துக்குமார்..!
நா.முத்துக்குமாரின் 16 ஆண்டு கால தவம்!
இரண்டாவது முறையாக தேசிய விருது : நா.முத்துக்குமார் மகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions