வீரப்பனை வில்லனாக்கி படம் எடுக்கும் இயக்குனர்: முத்துலட்சுமி எதிர்ப்பு

Bookmark and Share

வீரப்பனை வில்லனாக்கி படம் எடுக்கும் இயக்குனர்: முத்துலட்சுமி எதிர்ப்பு

சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையப்படுத்தி பல படங்கள் வந்துள்ளன. தற்போது டைரக்டர் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற பெயரில் புது படம் எடுக்கிறார். மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியது. பிறகு அதிரடிப் படையினர் காட்டுக்குள் புகுந்து வீரப்பனை கண்டுபிடித்து என்கவுண்டரில் கொன்றது போன்ற சம்பவங்களை வைத்து இந்த படத்தை எடுக்கிறார்.

இதில் வீரப்பன் கேரக்டரை வில்லனைப் போல் சித்தரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரப்பனை போலீஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஆபாசமாக திட்டுவது போன்ற வசனங்களும் இடம் பெற்றுள்ளனவாம்.

முழு படத்திலும் வீரப்பனை மோசமானவராக சித்தரித்து காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளதாம். தமிழகத்தில் இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பும் என்பதற்காகவே தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளில் மட்டும் இந்த படத்தை எடுக்கிறார்.

‘கில்லிங் வீரப்பன்’ படத்துக்கு வீரப்பனை ஆதரிக்கும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த படத்தை திரையிடக்கூடாது என்றும் வற்புறுத்தி உள்ளனர். இணையதளங்களிலும், ராம்கோபால் வர்மாவை கண்டித்து கருத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த படத்தில் வீரப்பனுக்கு எதிரான காட்சிகளை வைக்ககூடாது என்றும் அப்படி காட்சிகள் இருந்தால் கடுமையாக எதிர்ப்போம் என்றும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions