
ஒரு காலத்தில் சினிமாவை வந்தடைய ஒரு வழிப்பாதைதான் இருந்தது இப்போது பல வழிப் பாதைகள் உருவாகியிருக்கின்றன. தொலைக்காட்சி அறிமுகம் மூலமும், குறும்படங்கள், ஆல்பங்கள் போன்றவற்றின் மூலமும் என்றெல்லாம் பல திசைகளிலிருந்து எளிதில் சினிமாவில் நுழைய முடிகிறது.
அப்படி ஒரு புதிய திசையிலிருந்து வந்து முற்றிலும் புதுமுகங்களின் ஆதிக்கத்தில் 'அம்சனா' என்கிற ஒரு படத்தை உருவாக்கி வருகிறார்கள். 'முத்து முத்து' என்கிற மியூசிக் ஆல்பம் யூடியூபில் ஒன்பது மில்லியன், அதாவது 90 லட்சம் ஹிட்டடித்து கலக்கியது.
அதில் டிஜே என்பவர் பாடியதுடன் தோன்றி நடித்து அந்த ஆல்பத்தை உருவாக்கியும் வெளியிட்டார். இவரது இயற்பெயர் டிஜெந்தன் அருணாச்சலம். இவர் சர்வதேச புகழ் பெற்ற பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர்.
உலக நாடுகளில் அதற்குக் கிடைத்த பரவலான பலத்த வரவேற்பு திரையில் நுழையும் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் துணிவையும் டிஜேக்குத் தந்திருக்கிறது.
திட்டம்போட்டு ஆயத்தமாகி களத்தில் இறங்கிவிட்டார் டிஜே. 'அம்சானா' என்ற படத்தை எடுக்க முடிவு செய்து, டிஜேவே நாயகனாக களமிறங்கினார். நாயகி ஸ்ரீபிரியங்கா. ஒளிப்பதிவு- சிவானந்தம், இசை---டிஜே, இயக்கம்- நிஷாந்த் என படக்குழு உருவானது.
பாண்டிச்சேரிக்கு படப்பிடிப்புக்கு புறப்பட்டுப்போய், பாதிப்படத்தை முடித்து விட்டார்கள். இப்படத்தை லிசா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இது ஒரு காதல் கதைதான் என்றாலும் திரைக்கதை, அதைச் சொல்லும் விதம் எல்லாவற்றிலும் புதிய பாதை புதிய பயணம் என்றிருக்குமாம். இப்போதெல்லாம் படமெடுப்பதைவிட அதை வெளியிடுவது சிரமமாக இருக்கிறது. எனவே வியாபாரம், வெளியீடு தளங்களிலும் மும்முரமாக இயங்கி வருகிறது இந்தப் படக்குழு.
Post your comment
Related News | |
![]() |