ஆள்தோட்டபூபதி பாடல் உருவான கதை சொன்ன மிஷ்கின்!

Bookmark and Share

ஆள்தோட்டபூபதி பாடல் உருவான கதை சொன்ன மிஷ்கின்!

இயக்குனர் மிஷ்கின், வின்சென்ட் செல்வாவின் உதவி இயக்குனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். அவர் முதல்முறையாக வின்சென்ட் செல்வாவுடன் இணைந்து பணியாற்றிய படம் விஜய் நடித்த யூத்.

அந்த படத்தில் வரும் ஆள்தோட்டபூபதி பாடலுக்கு முதலில் வாலிதான் வரிகள் எழுதினாராம். தனது நண்பர் கபிலன் இந்த பாடலுக்கு வரிகள் எழுதினால் சிறப்பாக இருக்கும் என இயக்குனரிடம் மிஷ்கின் கூற, அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

ஆனால் வாலி இந்த பாடலை ஏற்கனவே எழுதிவிட்டதால் கபிலன் வரிகளை தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்ளவில்லையாம். எனினும் பாடல் பதிவின்போது பாடகர் ஷங்கர் மகாதேவனிடம் கபிலன் எழுதிய வரிகளை கொடுத்துவிட்டாராம் மிஷ்கின்.

முழு பாடலும் தயாரான பின்னர் கேட்டுப்பார்த்த இயக்குனர், இந்த வரிகள்தான் சிறப்பாக இருப்பதாக கூறி பின்னர் அதையே படத்தில் வைத்தாராம். இப்படித்தான் ஆள்தோட்டபூபதி எனும் மெகா ஹிட் பாடல் உருவானதாக இயக்குனர் மிஷ்கின் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions