செப்டம்பரில் மிஷ்கினின் புதிய படம்!

Bookmark and Share

செப்டம்பரில் மிஷ்கினின் புதிய படம்!

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை நடித்து, இயக்கிய மிஷ்கின், அதைத் தொடர்ந்து பாலா தயாரிப்பில் பிசாசு படத்தை இயக்கினார். பின்னர் சில முன்னணி ஹீரோக்களிடம் அவர் கால்சீட் கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் அதன்பிறகு அதுபற்றிய எந்த செய்திகளையும் காணவில்லை. இருப்பினும், மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் பணியாற்றுவதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள இளவட்ட நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இது நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் செம டென்சனாக காணப்படுகிறாராம் மிஷ்கின். இப்படி தான் கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் சான்ஸ் கேட்க வருபவர்கள் படையெடுப்பது பெரிய தொல்லையாக இருப்பதால், இப்போது தனது அலுவலக வாசலிலேயே, மிஷ்கின் இயக்கும் அடுத்த படம் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.

அதனால் அப்படத்தில் நடிக்க விரும்புபவர்கள் மற்றும் டெக்னீசியன்கள் அனைவரும் அதன்பிறகு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ஒரு அறிவிப்பை எழுதி ஒட்டியிருக்கிறார் மிஷ்கின்.


Post your comment





Related News
ரஜினியே அழைத்தாலும் அவரை வைத்து படமே எடுக்க மாட்டேன்- பிரபல இயக்குனர் ஓபன் டாக்
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் வருகிற 6-ஆம் தேதி பதவியேற்பு
மிஷ்கின் பாணியில் 8தோட்டாக்கள் படத்தில் இப்படி ஒரு சம்பவமா ?
என்னுடைய ஓடாத படங்கள் தான் சிறந்த படங்கள் - மிஷ்கினின் சர்ச்சை பேச்சு
விஷால் – மிஷ்கினின் துப்பறிவாளன் படப்பிடிப்பு தொடங்கியது!
விஷால் – மிஷ்கின் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகர்!
விஷாலுக்கு பெரும் உதவியாக இருக்கும் ராகுல் ப்ரீத்சிங்!
விசாரணை படத்தை மக்கள் மடியில் வைத்து தாலாட்டுவார்கள்- மிஷ்கின் பாராட்டு
இயக்குனர் மிஷ்கினின் புதிய படம் நவம்பரில் தொடங்குகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions