வெள்ளக்கார ராணி கொல்லிமலைத்தேனி! -மிஷ்கின் பாடிய குத்துப்பாட்டு

Bookmark and Share

வெள்ளக்கார ராணி கொல்லிமலைத்தேனி! -மிஷ்கின் பாடிய குத்துப்பாட்டு

மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதனால் அந்த படம் ஹிட்டாக அந்த பாடலும் முக்கிய காரணமாக இருந்தது.

அதையடுத்து, அவர் இயக்கிய அஞ்சாதே படத்தில் கத்தாழ கண்ணாலே குத்தாத நீ என்னை என்ற பாடலும் சூப்பர் ஹிட்டானது. அதேபோல், யுத்தம் செய் படத்திலும் கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா என்ற பாடல் இப்போது வரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஆனால் அப்படி மிஷ்கின் படங்களின் குத்துப்பாடல்கள் பெரும்பாலும் அவரது வெற்றிக்கு உறுதுணையாகவே இருந்தன. ஆனபோதும், அந்த பாடல்களெல்லாம் எனது அனுமதியின்றி தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்காக வைக்கப்பட்டவை என்று கூறுகிறார் மிஷ்கின்.

அதோடு, என் படங்களில் பாடல்கள் இடம்பெறுவதே எனக்கு பிடிக்காது. பாடல்கள் படத்தை கெடுத்து விடும் என்பதே எனது கருத்து. முக்கியமாக பாடல்கள் இல்லாத படங்களை இயக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று மேடைகளில் கூறி வருகிறார்.

அப்படி கூறும் மிஷ்கின், தற்போது கள்ளப்படம் என்ற படத்தில் வெள்ளக்கார ராணி கொல்லி மலைத்தேனி -என்றொரு குத்துப்பாடலை பாடியிருக்கிறார். கன்னித்தீவு பொண்ணா பாடல் பாணியில் அமைந்த இந்த பாடலை, பக்கா பாடகர்களைப்போன்றே அசத்தலாக பாடியிருக்கிறார் மிஷ்கின்.

குத்துப்பாடல்களே எனக்கு பிடிக்காது என்று சொல்லும் மிஷ்கினா இப்படி பாடியிருக்கிறார் என்பது ஆச்சர்யமாக உள்ளது. அந்த அளவுக்கு குத்துப்பாட்டை குஷியாக பாடியிருக்கிறார் அவர்.


Post your comment





Related News
ரஜினியே அழைத்தாலும் அவரை வைத்து படமே எடுக்க மாட்டேன்- பிரபல இயக்குனர் ஓபன் டாக்
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் வருகிற 6-ஆம் தேதி பதவியேற்பு
மிஷ்கின் பாணியில் 8தோட்டாக்கள் படத்தில் இப்படி ஒரு சம்பவமா ?
என்னுடைய ஓடாத படங்கள் தான் சிறந்த படங்கள் - மிஷ்கினின் சர்ச்சை பேச்சு
விஷால் – மிஷ்கினின் துப்பறிவாளன் படப்பிடிப்பு தொடங்கியது!
விஷால் – மிஷ்கின் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகர்!
விஷாலுக்கு பெரும் உதவியாக இருக்கும் ராகுல் ப்ரீத்சிங்!
விசாரணை படத்தை மக்கள் மடியில் வைத்து தாலாட்டுவார்கள்- மிஷ்கின் பாராட்டு
இயக்குனர் மிஷ்கினின் புதிய படம் நவம்பரில் தொடங்குகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions