அடுத்த படத்தை ‘ஏ’ சான்றிதழ் வரும்படிதான் எடுக்கப் போகிறேன்-மிஷ்கின் ஆவேச பேச்சு

Bookmark and Share

அடுத்த படத்தை ‘ஏ’ சான்றிதழ் வரும்படிதான் எடுக்கப் போகிறேன்-மிஷ்கின் ஆவேச பேச்சு

இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி வாசுதேவன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் ‘தற்காப்பு’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் பி.வாசு, எஸ்.பி.ஜனநாதன், மிஷ்கின், ஜி.என்.ஆர்.குமாரவேலன், கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இவ்விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, “ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் ஒன்று கூடும் இடம் ஒன்று என்றால், அது திரையரங்குகள்தான்.

திரையரங்குகள் கோவில் மாதிரி. ஒரு கோவிலுக்குள் சென்றால் நாம் சாமியை அண்ணாந்து பார்த்துதான் கும்பிடுகிறோம். அதேபோல், நாம் தியேட்டரில் படத்தை அண்ணாந்து பார்த்துதான் பார்க்கிறோம். 

அப்படிப்பட்ட படத்தை இயக்குவது ஒரு இயக்குனர். ஒரு இயக்குனர் தன்னுடைய கற்பனையில் உதித்த சிந்தனைகளை கதையாக உருவாக்கித்தான் ஒரு படமாக உருவாக்குகிறான். ஆனால், அந்த படம் குடும்பத்தோடு பார்க்கும்படி இல்லை, குழந்தைகள் ரசிக்கும்படி இல்லை என்று கூறி, தணிக்கை குழுவினர் அந்த படைப்பாளியின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள். இது எந்தவிதத்தில் நியாயம். 

ஒரு படத்தில் ஒருவனை திட்டவேண்டுமானால், திட்டத்தான் வேண்டும். அதற்கு பதில் அவனை கொஞ்சுவது போல் காட்சியமைக்க முடியாது. ஒருவன் கெட்ட வார்த்தை பேசாமலும், முத்தக்காட்சி இல்லாமலும் வாழவே முடியாது.

அப்படிப்பட்டதைத்தான் ஒரு இயக்குனர் தன்னுடைய படத்தில் பதிவு செய்கிறான். அதுமாதிரி இல்லாமல் படம் எடுத்தால் அது ரசிகனை ஏமாற்றுவதுபோல் ஆகிவிடும். ரசிகனை ஏமாற்றிவிட்டு நாம் வெற்றி பெற நினைத்தால் அது முடியவே முடியாது. 

என்னுடைய அடுத்த படத்தை ‘ஏ’ சான்றிதழ் வரும்படிதான் எடுக்கப் போகிறேன். என்னுடைய படத்தை பெண்களும் பார்க்க வேண்டாம், குழந்தைகளும் பார்க்கவேண்டாம். அடல்ட்ஸ் ஒன்லி மட்டும் பார்த்தால் போதும். 

சினிமா என்பது நம்முடைய வாழ்க்கையில் முக்கியமானது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி இவர்களெல்லாம் ரசிகர்களை எவ்வளவு சந்தோஷப்படுத்தியிருப்பார்கள். இவர்களெல்லாம் இல்லையென்றால் நமக்கு எப்படி ஒரு நல்ல பொழுதுபோக்கு கிடைத்திருக்கிருக்கும்” என்று பேசினார்.


Post your comment





Related News
ரஜினியே அழைத்தாலும் அவரை வைத்து படமே எடுக்க மாட்டேன்- பிரபல இயக்குனர் ஓபன் டாக்
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் வருகிற 6-ஆம் தேதி பதவியேற்பு
மிஷ்கின் பாணியில் 8தோட்டாக்கள் படத்தில் இப்படி ஒரு சம்பவமா ?
என்னுடைய ஓடாத படங்கள் தான் சிறந்த படங்கள் - மிஷ்கினின் சர்ச்சை பேச்சு
விஷால் – மிஷ்கினின் துப்பறிவாளன் படப்பிடிப்பு தொடங்கியது!
விஷால் – மிஷ்கின் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகர்!
விஷாலுக்கு பெரும் உதவியாக இருக்கும் ராகுல் ப்ரீத்சிங்!
விசாரணை படத்தை மக்கள் மடியில் வைத்து தாலாட்டுவார்கள்- மிஷ்கின் பாராட்டு
இயக்குனர் மிஷ்கினின் புதிய படம் நவம்பரில் தொடங்குகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions