மிஷ்கின், சினிமாவை விட்டு விலக முடிவு

Bookmark and Share

மிஷ்கின், சினிமாவை விட்டு விலக முடிவு

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மிஷ்கின். அடுத்து இயக்கிய அஞ்சாதே படம் மூலம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற்று தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார். மூன்றாவதாக இவரின் இயக்கத்தில் நந்தலாலா தாமதமாக வந்தாலும், அடுத்து அவரது இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் படம் வெற்றியைப் பெற்றது.

ஆனால், அதன் பின் அவர் இயக்கிய முகமூடி படம் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. எனினும் தொடர்ந்து இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு ஆகிய படங்களில் மிஷ்கின் தன் டச்சை விடாமல் பார்த்துக் கொண்டார்.

 

இதனிடையே, , “நான்கு படங்களை இயக்கி விட்டு சினிமாவை விட்டு விலகப் போகிறேன்”, என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை தன் பேட்டியொன்றில் சொல்லியிருக்கிறார் மிஷ்கின.

“சந்தோஷமான சூழலில் துக்கமான மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்”, என்று விரக்தியாக பேசியுள்ளார். அவருக்கு துரோகங்களையும் காயங்களையும் கொடுத்த சில மனிதர்களை திரைஉலகினர் உயரத்தில் வைத்துப் பார்ப்பதால் தனக்கு மிகப் பெரும் சோகம் ஏற்பட்டு விட்டது, என்றும் கூறியுள்ளார்.

ஆனால், அவர் யாருடைய பெயரைக் குறிப்பிட்டும் சொல்லாமல் பொதுவாக சினிமாக்காரங்க என்று சொல்லியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பாலா தயாரிப்பில் இயக்கிய பிசாசு படத்திற்கு முன்பாக மிஷ்கினே சொந்தமாகத் தயாரித்து இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் கடனாளியாக்கியதை கோலிவுட் அறியும். மிஷ்கின் குறிப்பிடும் அந்த சினிமாக்கார்ர்கள் யாரென்பதுதான் தெரியவில்லை.


Post your comment





Related News
ரஜினியே அழைத்தாலும் அவரை வைத்து படமே எடுக்க மாட்டேன்- பிரபல இயக்குனர் ஓபன் டாக்
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் வருகிற 6-ஆம் தேதி பதவியேற்பு
மிஷ்கின் பாணியில் 8தோட்டாக்கள் படத்தில் இப்படி ஒரு சம்பவமா ?
என்னுடைய ஓடாத படங்கள் தான் சிறந்த படங்கள் - மிஷ்கினின் சர்ச்சை பேச்சு
விஷால் – மிஷ்கினின் துப்பறிவாளன் படப்பிடிப்பு தொடங்கியது!
விஷால் – மிஷ்கின் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகர்!
விஷாலுக்கு பெரும் உதவியாக இருக்கும் ராகுல் ப்ரீத்சிங்!
விசாரணை படத்தை மக்கள் மடியில் வைத்து தாலாட்டுவார்கள்- மிஷ்கின் பாராட்டு
இயக்குனர் மிஷ்கினின் புதிய படம் நவம்பரில் தொடங்குகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions