விசாரணை படத்தை மக்கள் மடியில் வைத்து தாலாட்டுவார்கள்- மிஷ்கின் பாராட்டு

Bookmark and Share

விசாரணை படத்தை மக்கள் மடியில் வைத்து தாலாட்டுவார்கள்- மிஷ்கின் பாராட்டு

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ், சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ள ‘விசாரணை’ படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ளனர்.

வெனீஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, மனித உரிமைகளுக்கான சினிமா என்ற பிரிவில் ‘விசாரணை’  படம் விருதும் வென்றுள்ளது. 

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தை பார்த்த இயக்குனர் மிஷ்கின் படம் குறித்து, ‘விசாரணை’ ஒரு மிகச்சிறந்த படம். கலையும் கலைஞனும் கைகோர்த்து புதிய பரிணாமத்தினை எட்டியிருக்கின்றனர். 

வெற்றிமாறான், என் சக பயணியே, நீ நிகழ்த்திவிட்டாய். கலையின் உச்சியை தொட்டுவிட்டாய். உன் வாழ்வின் அர்த்தத்தினை முழுமையாக்கும் படமொன்றினை படைத்துவிட்டாய். பாலுமகேந்திரா மட்டும் இன்றிருந்தால் உன்னைக் கட்டித் தழுவி நெற்றியில் முத்தமிட்டு சந்தோஷத்தில் மூழ்கியிருப்பார். 

ஒரு கடுமையான உண்மையான திரைப்படமே ‘விசாரணை’. மனிதம் என்பதனை அத்திரைப்படம் எனக்கு உணர்த்தியது. மக்கள் இதை மடியில் வைத்து தாலாட்டுவார்கள். 

நண்பா, உன் ‘விசாரணை’ என் திரைப்பட ஞானத்தையும் என் வாழ்வின் புரிதலையும் உயர்த்துகிறது. இதே, சில வார்த்தைகளை கூவிச் சொல்கிறேன். சினிமா கலைஞனாகிய நாம் சர்வதேச அரங்குகளின் கதவுகளை கடந்த பத்து வருடங்களாகத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்போது ஒரு வெடிகுண்டை அந்த கதவுகளில் பொருத்துகிறேன். அதன் பெயர் ‘விசாரணை’. 

இனி வரலாறு சத்தமிடும். வெற்றிமாறா... தலை நிமிர்ந்து நட...” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions