மறைந்த நா.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடக்கிறது!

Bookmark and Share

மறைந்த நா.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடக்கிறது!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று காலை திடீரென மரணம் அடைந்தார். அவருடைய உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நா.முத்துக்குமார் மரணமடைந்த செய்தி அறிந்ததும் திரைத்துறையை சேர்ந்த பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவர்களில் இயக்குனர்கள் வெற்றிமாறன், சேரன், எஸ்.பி.ஜனநாதன், ராஜு முருகன், சீமான் கவிஞர் சினேகன், நடிகர்கள் விவேக், உதயநிதி ஸ்டாலின். பத்திரிகையாசிரியர் நக்கீரன் கோபால் உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மறைந்த முத்துக்குமாரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

நியூ ஆவடி ரோட்டில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. நா.முத்துக்குமாரின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
இரண்டு விஜய்யை ஒரே நேரத்தில் இயக்கும் மூடர் கூடம் நவீன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions