தேசிய விருது பெற்ற நா முத்துக்குமாரின் 'அழகு...' பாடல் இதுதான்!

Bookmark and Share

தேசிய விருது பெற்ற நா முத்துக்குமாரின் 'அழகு...' பாடல் இதுதான்!

‘சைவம்’ படத்தில் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் நா.முத்துக்குமார் எழுதி உத்தரா உன்னி கிருஷ்ணன் பாடி,  நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாகப் பெற்றுத் தந்த பாடல் வரிகள்...

இந்தப் பாடலைப் பாடிய உத்தரா உன்னி கிருஷ்ணனும் சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். 

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !
மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு !
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு !

சரணம் 1

குயிலிசை அது பாடிட – ஸ்வர வரிசைகள் தேவையா?
மயில் நடனங்கள் ஆடிட – ஜதி ஒலிகளும் தேவையா?
நதி நடந்தே சென்றிட வழித் துணைதான் தேவையா ?
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா?
இயற்கையோடு இணைந்தால்  உலகம் முழுதும் அழகு !
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு !

சரணம் 2

இதயமும் ஒரு  ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும்…
இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்
நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே 
நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே…
பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு !
அதையும் தாண்டிப் பேசும் நம் நேசம் ரொம்ப அழகு !


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
இரண்டு விஜய்யை ஒரே நேரத்தில் இயக்கும் மூடர் கூடம் நவீன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions