இரண்டாவது முறையாக தேசிய விருது : நா.முத்துக்குமார் மகிழ்ச்சி

Bookmark and Share

இரண்டாவது முறையாக தேசிய விருது : நா.முத்துக்குமார் மகிழ்ச்சி

கடந்த ஆண்டு, தங்க மீன்கள் படத்திற்காக, தேசிய விருது பெற்றிருந்த எனக்கு, இந்தாண்டும் தேசிய விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கூறியுள்ளார்.

சைவம் படத்தில், அழகே...அழகே..பாடல் எழுதியதற்காக, பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு, இந்தாண்டிற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, மகிழ்ச்சியை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்ட நா.முத்துக்குமார் கூறியதாவது, கடந்த ஆண்டு, தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடலுக்காக, தேசிய விருது பெற்றேன்.

தற்போது, சைவம் பட பாடலுக்காக விருது பெறப்போகிறேன். இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விருது பெற காரணமாக இருந்த இயக்குநர் ஏ.எல்.விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் அப்படக்குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அழகே...அழகே...பாடலை பாடிய உத்ராவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.மேலும் இவ்விருது குழுவில் இடம்பெற்றுள்ள பாரதிராஜா அவர்களுக்கும், இத்தருணத்தில், எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

காக்காமுட்டை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது, தேசிய விருது பெற உள்ள படத்தில், நான் நடித்துள்ளேன் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக, ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
இரண்டு விஜய்யை ஒரே நேரத்தில் இயக்கும் மூடர் கூடம் நவீன்
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions