நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க

Bookmark and Share

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க

இப்போதெல்லாம் சினிமா எடுப்பது ரொம்ப ஈசி. அதற்கு தலைப்பு வைப்பதுதான் ரொம்ப கஷ்டம். 3 லட்சம் வார்த்தைகள் கொண்ட தமிழ் மொழியில் தலைப்பு வைக்கத்தான் படாத பாடு படுகிறார்கள்.

யோக்கியன் வர்றான் செம்பை தூக்கி உள்ளை வை என்று ஒரு படத்துக்கு தலைப்பு வைத்தார்கள். இப்போது இன்னொரு படத்துக்கு நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். புதுமுங்கள் இந்திரஜித், தேவிகா நடிக்கிறார்கள். நடன இயக்குனர் சிவசங்கர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

டி.எஸ்.வாசன் ஒளிப்பதிவு செய்கிறார், ரிஷால் சாய் இசை அமைக்கிறார். மாதவன் என்ற புதுமுகம் இயக்குகிறார். "ஆன் லைன் மார்க்கெட்டிங் இப்போது கொடி கட்டி பறக்கிறது.

இனி வரும் காலங்களில் கடைவீதி, மார்க்கெட் எதுவுமே இருக்காது. ஆன்லைனில் ஆர்டர் பண்ணினால் பொருள் வீட்டுக்கு வரும். ஆனால் இதனை பயன்படுத்தி பலர் ஏமாற்றவும் செய்கிறார்கள்.

ஆன்லைன் வியாபாரத்தில் எப்படியெல்லாம் மோசடி நடக்கிறது என்பதை காமெடியாக சொல்கிற படம் இது. இனி மக்களுடன் அதிக பேசப்போவது ஆன்லைன்தான். அதுல நாலு பேரு நாலு விதமாக பேசி தங்கள் பொருளை விற்க பார்ப்பார்கள். நாமதான் கவனமாக இருக்க வேண்டும் என்கிற மெசேஜை சொல்லும் படம்" என்கிறார் இயக்குனர் மாதவன்.


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
நகைசுவை படமாக உருவாகும் “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”
உறுமீன் வெற்றி நடைபோடுகிறது: சக்திவேல் பெருமாள்சாமி பேட்டி
நாலு போலீசுக்கு தடை கேட்டு வழக்கு
அருள்நிதி படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்தின் காப்பியா?: கோலிவுட்டில் சலசலப்பு
ஒரே நாளில் JSK தயாரிப்பில் இரண்டு படங்கள் வெளியீடு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions