நாலு போலீசுக்கு தடை கேட்டு வழக்கு

Bookmark and Share

நாலு போலீசுக்கு தடை கேட்டு வழக்கு

அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள படம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும். வருகிற 24ந் தேதி வெளிவருவதாக உள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் எம்.எஸ்.கே.பிலிம் புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் நிர்வாகி பி.நாகராஜ் படத்துக்கு தடைகேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமத்தை எங்கள் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பபட்டது. அதற்கு 21 லட்சம் ரூபாய் பேசப்பட்டு முன்பணமாக 7 லட்சம் கொடுத்துள்ளோம்.

மீதமுள்ள தொகை பட ரிலீசுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.  தற்போது படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் எங்களுக்கு வெளிநாட்டு உரிமத்தை இதுவரை தரவில்லை.

இது தொடர்பாக அவர்களை தொடர்பு கொண்டபோதும் சரியான பதில் இல்லை. எங்களிடம் முன் பணத்தை வாங்கிக் கொண்டு வெளிநாட்டு உரிமம் தராமல் உள்ளனர். எனவே படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுமீதான விசாரணையை வருகிற வியாழக்கிழமைக்கு (நாளை) தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நாலு போலீசும் நல்லா இருந்து ஊரும் படம் வருகிற 24ந் தேதி வெளிவருவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் இப்படி தான் இருக்கும் - இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்.!
அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா?
விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்கிய விஜய் சேதுபதியின் படக்குழு.!
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் பற்றி தயாரிப்பாளர் அதிரடி அறிக்கை.!
நல்லக்கண்ணு, சகாயத்திடம் ஆசி பெறுங்கள்: புது கட்சி துவங்கிய இளைஞர்களுக்கு விவேக் அட்வைஸ்
நகைசுவை படமாக உருவாகும் “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”
அருள்நிதி படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்தின் காப்பியா?: கோலிவுட்டில் சலசலப்பு
ஒரே நாளில் JSK தயாரிப்பில் இரண்டு படங்கள் வெளியீடு!
நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க
மே 22ஆம்தேதி வெளியாகும் \'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்\'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions