அடுத்தடுத்து பூஜை போடும் நிறுவனம்...!

Bookmark and Share

அடுத்தடுத்து பூஜை போடும் நிறுவனம்...!

தமிழில் 'நான் ஈ' என்ற ஒரே ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்த பிவிபி சினிமாஸ் நிறுவனம் “ராஜாபாட்டை, இரண்டாம் உலகம்” ஆகிய மாபெரும் தோல்விப் படங்களையும் தயாரித்தது.

தெலுங்கில் முன்னணி நிறுவனமாக இருந்தாலும் தமிழிலும் நன்றாக கால் பதிக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் நினைத்துள்ளதாம். அதனால் தற்போது தமிழ், தெலுங்கு என மொழிகளில் மூன்று படங்களைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளது.

நாகார்ஜுனா, கார்த்தி நடிக்கும் ஒரு படத்திற்கு சில வாரங்களுக்கு முன்பே ஹைதராபாத்தில் பூஜை போட்டாலும், சில நாட்களுக்கு முன் சென்னையிலும் பூஜை போட்டனர். நேற்று, 'பெங்களூர் டேய்ஸ்' படத்தின பூஜையை சென்னையில் நடத்தினர்.

இன்று ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் படமான 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் பூஜையை நடத்தியுள்ளனர். இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பிற்கு சில வாரங்களுக்கு முன் ஹைதராபாத்தில் பூஜை நடத்தினர்.

தமிழிலும், தெலுங்கிலும் தயாராகும் படங்களை நேரடித் தமிழ்ப் படங்களைப் போலக் காட்டிக் கொள்ள இங்கும் பூஜை நடத்துவது திரையுலகில் வழக்கமாக நடக்கக் கூடிய ஒன்றுதான். ஆனாலும், ஒரே வாரத்தில் ஒரே நிறுவனம் இப்படி மூன்று பூஜைகளை நடத்தியிருப்பது கோலிவுட்டில் மிகப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions