கிழக்கு ஆப்பிரிக்க மொழியில் வெளியாகும் நான் ஈ

Bookmark and Share

கிழக்கு ஆப்பிரிக்க மொழியில் வெளியாகும் நான் ஈ

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், நானி, சுதீப், சமந்தா மற்றும் பலர் நடித்து 2012ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் நான் ஈ. இந்தப் படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டாலும் பல இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது.

கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட ஒரு ஈயை வைத்து இந்த அளவிற்கு ஒரு பரபரப்பான ஆக்ஷன் படத்தைக் கொடுக்க முடியுமா என இந்தியத் திரையுலகமே ஆச்சரியப்பட்டது. இயக்குனர் ஷங்கருக்கு அடுத்தபடியாக இந்தியத் திரையுலகில் தன்னுடைய திறமையால் இடம் பிடிக்கக் கூடியவர் ராஜமௌலி என பலராலும் பாராட்டப்பட்டார்.

தற்போது பாகுபலி என்ற சரித்திர காலப் படத்தை இயக்கி வருகிறார். நேற்று ராஜமௌலி அவருடைய சமூகவலைத்தளத்தில் ஆச்சரியப்படும் தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

“கிழக்கு ஆப்பிரிக்காவில் அதிக மக்களால் பேசப்படக் கூடிய ஸ்வாஹிலி என்ற மொழியில் நான் ஈ படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ஒரு தெலுங்குப் படம் அந்த மொழியில் டப்பிங் செய்யப்படுவது இதுவே முதல் முறை. டான்சானியா, கென்யா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ ஆகிய நாடுகளில் இன்சி என்ற தலைப்பில் இப்படம் வெளியாகப் போகிறது.

அந்த மொழியில் “ஈ - ஒரு சரியான பழிக்குப் பழி என்ற டேக் லைனுடன் இந்தப் படத்தை டான்சானியா நாட்டிலுள்ள ஒரு நிறுவனம் வெளியிடுகிறது,” என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions