கே.எஸ்.ரவிக்குமாரை வெயிட்டிங்கில் வைத்த நான்ஈ சுதீப்!

Bookmark and Share

கே.எஸ்.ரவிக்குமாரை வெயிட்டிங்கில் வைத்த நான்ஈ சுதீப்!

கன்னட நடிகர் சுதீப்பிடம் ரஜினியை வைத்து லிங்கா படத்தை இயக்குவதற்கு முன்பிருந்தே கால்சீட் கேட்டு வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

அந்த சமயத்தில் ரஜினி படத்தை ரவிக்குமார் இயக்குவதாக செய்திகள் வெளியானபோது, சென்னையிலுள்ள கமலா தியேட்டரில் நடைபெற்ற ஒரு ஆடியோ விழாவில் கலந்து கொண்ட கே.எஸ்.ரவிக்குமார், நான் ரஜினி படத்தை இயக்கவில்லை. நான்ஈ சுதீப் நடிக்கும் படத்தைதான் இயக்குகிறேன் என்று சொன்னார்.

ஆனால், அப்போது பேசினபடி சுதீப் அவருக்கு கால்சீட் கொடக்கவில்லை. அதனால் என்ன செய்வதென்று அவர் தடுமாறிக்கொண்டிருந்தபோதுதான், ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார்.

அதையடுத்து லிங்கா பட வேலைகளில் தீவிரமாக இறங்கிய ரவிக்குமார், சுதீப் கால்சீட் தர முன்வந்தபோது ரஜினி படத்தை முடித்த பிறகு சொல்கிறேன் என்று கூறிவிட்டாராம்.

இதனால் அடுத்தடுத்து சில படங்களில் கமிட்டாகி விட்டாராம் சுதீப். அதனால் லிங்காவுக்கு பிறகு அவர் மீண்டும் சுதீப்பிடம் கால்சீட் கேட்டபோது, அப்போதைய நிலவரப்படி பாகுபலி மற்றும் இரண்டு கன்னட படங்களிலும் நடித்து வந்ததால், ஆகஸ்டு மாதத்திற்கு பிறகுதான் கால்சீட் கிடைக்கும் எனறு கூறி விட்டாராம். அதனால் தற்போது கதை விவாதத்தை முடித்து சுதீப்புக்காக வெயிட்டிங்கில் இருக்கிறார் ரவிக்குமார்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions