நான் கடவுள் 2-ம் பாகம் உருவாகுமா? பாலா விளக்கம்

Bookmark and Share

நான் கடவுள் 2-ம் பாகம் உருவாகுமா? பாலா விளக்கம்

பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்து கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘நான் கடவுள்’. இப்படத்தில் ஆர்யா அகோரி வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. இப்படத்தில் அகோரி வேடத்தில் நடிப்பதற்காக ஆர்யா தாடி வளர்த்து, உடம்பை குறைத்து படத்திற்காக தன்னை வருத்திக் கொண்டார்.

இந்நிலையில், ஆர்யாவை வைத்து ‘நான் கடவுள்’ படத்தின்  இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவு உள்ளதா? என்று அண்மையில் பாலாவிடம் கேட்டபோது, அவர் கூறும்போது, அவர் ‘நான் கடவுள்’ படத்திற்காக ஆர்யா, தனது உடலை வருத்தி மிகவும் கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்.

அதனால், நான் மீண்டும் ஆர்யாவை துன்புறுத்த விரும்பவில்லை என்று கூறினார்.இதிலிருந்து, பாலா இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவில் இல்லை என்றே தெரிகிறது.

பாலா தற்போது சசிகுமார்-வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் ‘தாரை தப்பட்டை’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இது இளையராஜாவின் 1000-மாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
விஜய்யை தொடர்ந்த இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?
“சின்ன படங்களை கொல்லாதீங்க” ; 'நான் இப்படித்தான்' விழாவில் கொந்தளித்த தயாரிப்பாளர்!
மரகத நாணயம் படக்குழு மீது உரு பட தயாரிப்பாளரின் மனவருத்தம்!
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
மரகத நாணயம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெய் ஆனந்த்
நயன்தாரா காதலனை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்- இப்படி ஒரு சோதனையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions