ரசாயன கலவையில் குளித்த நான்கடவுள் ராஜேந்திரன்!

Bookmark and Share

ரசாயன கலவையில் குளித்த நான்கடவுள் ராஜேந்திரன்!

நான் கடவுள் படத்தில் இருந்து வில்லன் வேடங்களாக நடித்து வந்த ராஜேந்திரன், சமீபகாலமாக காமெடியிலும் கலக்கி எடுத்து வருகிறார். குறிப்பாக, பாஸ் என்கிற  பாஸ்கரன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், திருடன் போலீஸ், டார்லிங் போன்ற படங்களில் அவரது காமெடி பெரிய அளவில் ஒர்க் அவுட்டானது.

இந்தநிலையில், இன்று அவரது நடிப்பில் வெளியாகும் இவனுக்கு தண்ணில கண்டம் படத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் ஒரு அதிரடியாக காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இதையடுத்தும் பல படங்களில் ஷோலோ காமெடியனாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ஆனால் இப்படி வில்லன் இமேஜில் இருந்து நான் கடவுள் ராஜேந்திரன் காமெடியனாக மாற்றியது ஒரு பெரிய கதையாம். அதாவது, ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக இவர் கேரளா சென்றிருந்தபோது அங்கு ஒருநாள் தண்ணீர் நிரம்பியிருந்த ஒரு தொட்டிக்குள் இறங்கி குளித்தாராம்.

ஆனால், குளித்து முடித்த பிறகுதான் அது ரசாயன கலவை கலந்த தண்ணீர் என்பது அவருக்கு தெரிய வந்திருக்கிறது. அதையடுத்து, சில நாட்களிலேயே அவரது தலையில் இருந்த முடிகள் அனைத்தும் உதிர்ந்து விழுந்து விட்டதாம்.

அதிலிருந்து அவரது தலையில் முடியே முளைக்க வில்லையாம். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டாராம் ராஜேந்திரன். அப்படி அவர் அதிர்ச்சியடைந்திருந்தபோது, அவரது மொட்டைத்தலையைப்பார்த்த டைரக்டர்கள், ராஜேந்திரனின் இந்த மொட்டைத்தலை சூப்பராக உள்ளது என்று சொல்லி காமெடி கேரக்டர்களுக்கு அவரை புக் பண்ணியிருக்கிறார்கள்.

ஆக, எந்த மொட்டை தனக்கு மைனஸாகி விடுமோ என்று அவர் பயந்தாரோ அந்த மொட்டைத்தலையோ அவருக்கு ப்ளஸ் ஆகியிருக்கிறது. அதை இப்போதும் சொல்லும் நான் கடவுள் ராஜேந்திரன், ரசாயன கலவையில் குளித்தது எனது சினிமா கேரியரையே மாற்றி விட்டது என்று இப்போதும் நண்பர்களிடம் சொல்லி சந்தோசப்பட்டுக்கொள்கிறார்.

 


Post your comment





Related News
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
விஜய்யை தொடர்ந்த இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?
“சின்ன படங்களை கொல்லாதீங்க” ; 'நான் இப்படித்தான்' விழாவில் கொந்தளித்த தயாரிப்பாளர்!
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
மரகத நாணயம் படக்குழு மீது உரு பட தயாரிப்பாளரின் மனவருத்தம்!
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions