காமெடியனாக மாறும் நான் கடவுள் ராஜேந்திரன்!

Bookmark and Share

காமெடியனாக மாறும் நான் கடவுள் ராஜேந்திரன்!

பாலா இயக்கிய பிதாமகனில் அறிமுகமானவர் ராஜேந்திரன். அதையடுத்து பாலாவின் நான் கடவுள் படத்தில் அதிரடி வில்லனாக நடித்தார் ராஜேந்திரன். அந்த படம் அவரை பேச வைத்தது.

அதனால், அதிலிருந்து அவர் நான் கடவுள் ராஜேந்திரனாகி விட்டார். பின்னர் தொடர்ந்து வில்லனாக நடித்து வந்தார். ஆனால், ஆர்யா நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் வில்லன் ப்ளஸ் காமெடியனாக அவர் நடித்த வேடம்தான் அவரை பேச வைத்தது.

அதனால், தனது காமெடியைத்தான் ரசிகர்கள் அதிகமாக ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட ராஜேந்திரன், திருடன் போலீஸ், டார்லிங் உள்பட சில படங்களில் காமெடித்தனமாக நடித்தார்.

அந்த படங்கள் அவரது மார்க்கெட்டையே உயர்த்தி விட்டது. அதனால், தன் மீதிருக்கும் வில்லன் இமேஜை உடைத்தெறிந்து விட்டு காமெடியனாகும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறார் ராஜேந்திரன்.

அதனால் தன்னை யாராவது டெரரான வில்லன் வேடத்திற்கு புக் பண்ண வந்தால், இப்போதுதான் அந்த இமேஜை விட்டு விலகி ரசிகர்கள் விரும்பும் ராஜேந்திரனாக மாறிக்கொண்டிருக்கிறேன்.

இந்த நேரத்தில் திரும்பவும் வில்லனாக நடிக்க வேண்டுமா? என்று கேட்கும் நான் கடவுள் ராஜேந்திரன், அப்படியே வில்லனாக நடித்துதான் ஆக வேண்டும் என்றால், காமெடி காட்சிகளும் கலந்து கொடுங்கள். அதுதான் எனக்கு செட்டாகும் என்று கேட்டு வாங்கி வருகிறார். 


Post your comment





Related News
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
விஜய்யை தொடர்ந்த இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?
“சின்ன படங்களை கொல்லாதீங்க” ; 'நான் இப்படித்தான்' விழாவில் கொந்தளித்த தயாரிப்பாளர்!
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
மரகத நாணயம் படக்குழு மீது உரு பட தயாரிப்பாளரின் மனவருத்தம்!
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions