சைக்கிள் கடை ராஜேந்திரன்!

Bookmark and Share

சைக்கிள் கடை ராஜேந்திரன்!

தூத்துக்குடியில் இருந்து சினிமாவில் நடிக்கும் ஆர்வத்துடன் வந்தவர்தான் நான் கடவுள் ராஜேந்திரன். ஆனால் சினிமா கதவுகள் அவருக்கு அத்தனை எளிதில் திறந்து விடவில்லை.

அதனால் சென்னைக்கு வந்தவுடன் அன்றாட தேவைகளுக்காக சென்னை கோடம்பாக்கத்திலுள்ள டிரஸ்ட் புரத்தில் ஒரு சைக்கிள் கடை நடத்தி வந்திருக்கிறார் ராஜேந்திரன்.

சைக்கிள்களை வாடகைக்கு விடுவது மட்டுமின்றி, சைக்கிள் மெக்கானிக்கும் பார்த்து வந்துள்ள ராஜேந்திரன், அதை நடத்திக்கொண்டே பைட்டராக சினிமாவில் என்ட்ரியாகியிருக்கிறார்.

அதற்காக தனது உடம்பையும் ஜிம்முக்கு சென்று கட்டுமஸ்தாக வைத்திருந்ததால் அவருக்கு பல படங்களில் பைட்டர் சான்ஸ் கிடைத்து வந்திருக்கிறது. அப்போதுதான், டைரக்டர் பாலாவின் கண்ணில் பட, நான் கடவுள் படத்தில் வில்லனாக்கியிருக்கிறார்.

அப்படி நடித்த நான் கடவுள் ராஜேந்திரன் இப்போது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். ஆரம்பத்தில் வில்லனாக நடித்தபோது அவரைக்கண்டாலே எரிச்சலடைந்த ரசிகர்கள், இப்போது அவரைக்கண்டாலே கைதட்டியபடி சிரிக்கிறார்கள். அந்த அளவுக்கு பெஸ்ட் காமெடியனாகி விட்டார் அவர்.

ஆனால் இந்த நிலையிலும், தான் சைக்கிள் கடை வைத்திருந்தபோது பழகிய நண்பர்கள் தன்னை சந்தித்தால் மணிக்கணக்கில் பழைய கதைகளை பேசுகிறாராம் ராஜேந்திரன்.

அதோடு அவர்கள் நான் கடவுள் ராஜேந்திரன் என்று அவரை அழைத்தால்,. அட போங்கப்பா நான் எப்போதும் உங்களுக்கு சைக்கிள் கடை ராஜேந்திரன்தான். அதனால் என்னை அப்படியே கூப்பிடுங்கள் என்கிறாராம்.

காரணம் அந்த சைக்கிள் கடையை நடத்தி சென்னையில் நிரந்தரமானதால்தான் என்னால் சினிமாவில் சாதிக்க முடிந்தது. அது இல்லையென்றால் சென்னையில் என்னால் குடித்தனம் நடத்தவே முடிந்திருக்காது. அதனால் அந்த சைக்கிள் கடையை என்னால் ஒருநாளும் மறக்கவே முடியாது என்கிறாராம் நான் கடவுள் ராஜேந்திரன்.


Post your comment





Related News
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
விஜய்யை தொடர்ந்த இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?
“சின்ன படங்களை கொல்லாதீங்க” ; 'நான் இப்படித்தான்' விழாவில் கொந்தளித்த தயாரிப்பாளர்!
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
மரகத நாணயம் படக்குழு மீது உரு பட தயாரிப்பாளரின் மனவருத்தம்!
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions