நான் கடவுள் ராஜேந்திரனின் இளகிய மனசு!

Bookmark and Share

நான் கடவுள் ராஜேந்திரனின் இளகிய மனசு!

பெரும்பாலும் காமெடி காட்சிகள் என்றால் வசனங்கள், பாடிலாங்குவேஜ் மூலம்தான் நடித்து ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள் காமெடியன்கள். ஆனால் அது நான் கடவுள் ராஜேந்திரன் விசயத்தில் வேறு மாதிரியாக இருக்கிறது.

அதாவது அவர் மற்றவர்களைப் போன்று காமெடி செய்த படங்களை விட அருவா கம்பு, துப்பாக்கியை தூக்கி கொண்டு நடித்த படங்களில்தான் அவரது காமெடிக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதனால் இவரே மாற நினைத்தாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. அவரை ரவுடியாக, கூலிப்படையாக, கறிக்கடைக்காரனாக என அவரது கையில் ஏதாவது ஆயுதங்களை கொடுத்துதான் நடிக்க வைக்கிறார்கள்.

ஆனால் அப்படி சொல்லும் டைரக்டர்களிடம், காமெடி செய்கிறோம் எதற்காக அருவா கம்புடன் திரிய வேண்டும் என்று இவர் கேள்வி கேட்டால், அப்படி எதையாவது தூக்கினால்தான் உங்க காமெடி ஒர்க்அவுட் ஆவுது என்கிறார்களாம்.

ஆக, நாம் நினைப்பதை விட மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள். எதை ரசிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்ற முடிவுக்கு இப்போது வந்து விட்ட நான் கடவுள் ராஜேந்திரன், டைரக்டர்கள், ரசிகர்கள் விரும்பும் பாதையிலேயே தொடர்ந்து பயணிக்க முடிவு செய்துவிட்டாராம்.

அதேசமயம், அவர் பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றத்தில் இருந்தாலும் நிஜத்தில் இளகிய மனம் கொண்டவராம். யாராவது கண்கலங்குவதை பார்த்தால் தானும் கரைந்து விடுவாராம்.


Post your comment





Related News
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
விஜய்யை தொடர்ந்த இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?
“சின்ன படங்களை கொல்லாதீங்க” ; 'நான் இப்படித்தான்' விழாவில் கொந்தளித்த தயாரிப்பாளர்!
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
மரகத நாணயம் படக்குழு மீது உரு பட தயாரிப்பாளரின் மனவருத்தம்!
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions