சம்பளத்தை உயர்த்தாத நான் கடவுள் ராஜேந்திரன்!

Bookmark and Share

சம்பளத்தை உயர்த்தாத நான் கடவுள் ராஜேந்திரன்!

சினிமா உலகைப்பொறுத்தவரை ஒரு மெகா ஹிட்டுக்காகத்தான் நடிகர் நடிகைகள் காத்திருப்பார்கள். அதுவரை இருக்கிற இடமே தெரியாமல் இருக்கும் அவர்கள், கொடுக்கிற சம்பளத்தையும் வாஙக்கிக்கொள்வார்கள்.

ஆனால் அவர்கள் எதிர்பார்க்கிற ஹிட் கிடைத்ததும் அவர்களது கேரக்டரும், படக்கூலியும் எக்குத்தப்பாக எகிறி விடும். ஆனால் இந்த விசயத்தில் டைரக்டர் பாலாவினால் நான் கடவுள் படத்தில் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்ட ராஜேந்திரன் ரொம்பவே அடக்கி வாசிக்கிறாராம்.

வில்லனாக அவர் அதிக படங்களில் நடித்தபோதும் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் தொடங்கி காமெடியே அவருக்கு கைகொடுத்து வருகிறது. அந்த வகையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம், திருடன் போலீஸ், டார்லிங் என அவர் காமெடி கேரக்டர்களில் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால், இப்போது அவரை தேடிச்செல்வதெல்லாம் காமெடி வேடங்கள்தான்.

அந்த வகையில், 10 படங்கள் வரை பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நான் கடவுள் ராஜேந்திரன். இதன்காரணமாக, அவரது சம்பளம் தற்போது தாறுமாறாக எகிறியிருக்கும் என்று சிலர் அவரை நெருங்கவே பயப்படுகிறார்கள்.

இந்த சேதி அவரது காதுக்கு சென்றதை அடுத்து, எனது சம்பளத்தை சில தயாரிப்பாளர்கள்தான் சற்று உயர்த்தி விட்டுள்ளனர். மற்றபடி நானாக சம்பளம் பேசினால் எனது பழைய சம்பளத்தைதான் இப்போதும் வாங்குகிறேன்.

அதனால் யாரும் என்னை புக் பண்ண பயப்பட வேணடிய தேவையில்லை என்று தனது சகாக்கள் மூலம் கோடம்பாக்கத்தில் செய்தி வெளியிட்டு வருகிறார்.


Post your comment





Related News
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
விஜய்யை தொடர்ந்த இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?
“சின்ன படங்களை கொல்லாதீங்க” ; 'நான் இப்படித்தான்' விழாவில் கொந்தளித்த தயாரிப்பாளர்!
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
மரகத நாணயம் படக்குழு மீது உரு பட தயாரிப்பாளரின் மனவருத்தம்!
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions