காதல் கதையை தேர்ந்தெடுத்த நானி

Bookmark and Share

காதல் கதையை தேர்ந்தெடுத்த நானி

டோலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நானி, எவிடே சுப்ரமணியம் படத்தின் வெற்றிக்கு பின்னர் தான் நடிக்கும் படங்களை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்கின்றார்.

தற்போது நானி பலே பலே மகாதேவோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இயக்குநர் மாருதி இயக்கும் இப்படத்தில் நடிகை லாவண்யா திரிபதி நாயகியாக நடித்து வருகின்றார். அல்லு அரவிந்த் தயாரிக்கும் இப்படத்தின் திரையிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து நானி இயக்குநர் ஹனு ரகாவபுடி இயக்கும் காதல் கதையம்சம் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மாறுபட்ட கதைகளில் நடித்து வந்த நானி மீண்டும் கமர்சியல் பாதைக்கு திரும்பியுள்ளார்.

14 ரீல்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நானிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. நடிகை காஜல் அகர்வால் தமிழில் தற்போது நடிகர் விஷாலின் பாயும் புலி, நடிகர் தனுஷின் மாரி படம் என பிசியாக உள்ளார்.

சமீபமாக தெலுங்கு பட வாய்ப்புகள் வராததால் காஜல், நானியுடன் இணைந்து தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பை கண்டிப்பாக ஏற்பார் என்றும் டோலிவுட்டில் கூறப்படுகின்றது.


Post your comment





Related News
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
விஜய்யை தொடர்ந்த இவருக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?
ராஜமௌலி வாழ்த்தில் நனைந்த நானி
பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகராக மாறிய நானி!
காஜல் அகர்வாலுடன் ஜோடி சேரும் நானி
ரஜினி,அஜீத்,சூர்யா பஞ்ச் டயலாக்கள் நானி படத்தில் பாடலானது..!
நான் ஈ புகழ் நானியுடன் தமிழ் படத்துக்காக ஜோடி போடும் நடிகை ப்ரணீதா!
ஓடிப்போன ஹீரோவுக்கு பதிலாக வெப்பம் நானி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions