பட குழுவை துரத்திய போலீஸ்

Bookmark and Share

பட குழுவை துரத்திய போலீஸ்

பெண்ணை கடத்துவதாக எண்ணி பட குழுவை துரத்தியது போலீஸ். இதுபற்றி ‘நானும் காதலிச்சேன்‘ பட இயக்குனர் பி.ஆனந்த் கூறும்போது, ‘படிக்கும் வயதில் காதலில் விழும் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக ஈரோடு அருகில் சித்தேடு நெடுஞ்சாலையில் கதாநாயகி நூர்யாவை காரில் கடத்தும் காட்சி படமாக்கினோம். இதை தவறாக புரிந்துகொண்ட ரோந்து போலீசார் எங்களை விரட்டி வந்தனர்.

ஈரோடு சிக்னல் அருகே சுற்றி வளைத்தனர். இதைக்கண்டு பொதுமக்களும் கூடிவிட்டனர். பின்னர் இது சினிமா ஷூட்டிங் என்பதை போலீசாரிடம் விளக்கி காரில் மறைத்து வைத்து படமாக்கிக்கொண்டிருந்த படப்பிடிப்பு சாதனங்களை காட்டியபிறகு விடுவித்தனர்.

சூர்யபிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். சந்திரன் சாமி ஒளிப்பதிவு. பிரேமா, வினோஜ் தாமஸ் தயாரிக்கின்றனர். சந்தோஷ் சந்திரபோஸ் இசை அமைக்கிறார்' என்றார்.


Post your comment





Related News
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நயன்தாரா காதலனை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்- இப்படி ஒரு சோதனையா?
மீண்டும் இணையும் நானும் ரௌடிதான் கூட்டணி!
தெருவில் பேண்ட்டை மடித்துவிட்டு இறங்கி வேலைபார்க்கும் பார்த்திபன்
நானும்ரவுடிதான் படத்தை ரீமேக் செய்ய கடும்போட்டி!
முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்
நானும்ரவுடிதான் இயக்குனரின் அடுத்த பட தலைப்பு?
தீபாவளி புயலிலும் அசராமல் நிற்கும் 'நானும் ரௌடிதான்'
சீயானை பின்னுக்கு தள்ளிய விஜய்!
அனிருத் சென்டிமெண்டால் வெற்றி பெற்ற நானும் ரவுடிதான்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions