பாண்டிச்சேரியில் நானும் ரவுடிதான் இறுதிக்கட்ட படப்பிடிப்பு

Bookmark and Share

பாண்டிச்சேரியில் நானும் ரவுடிதான் இறுதிக்கட்ட படப்பிடிப்பு

திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தபிறகு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தற்போது நிம்மதி அடைந்துள்ளார்கள். இந்நிலையில், இவர்கள் இரண்டு பேரும் இணைந்திருக்கும் ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை பாண்டிச்சேரியில் தொடங்கவிருக்கின்றனர். 

இப்படத்தில் ஹீரோவாக நடித்து வரும் விஜய்சேதுபதி, இப்படத்தை முடித்த கையோடு நலன் குமாரசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். நயன்தாரா கைவசம் நிறைய படங்கள் இருந்தாலும், இப்படத்தை முடித்த பிறகு கார்த்தி நடிக்கும் ‘கஸ்மோரா’ படத்தில் நடிக்கவிருக்கிறார். 

இதனால், விஜய்சேதுபதியும்-நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்து வருகின்றனர். ‘நானும் ரவுடிதான்’ படத்தை தனுஷ் தனது ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

அனிருத் இசையமைக்கிறார். பார்த்திபன், ராதிகா சரத்குமார் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
தானா சேர்ந்த கூட்டம் இயக்குனரை தாண்டி மற்றவர்களுக்கு சூர்யா செய்த செயல்
சூர்யாவின் சொடக்கு பாடலால் வந்த விபரீதம், பஸ் கண்ணாடியை உடைத்து தள்ளிய ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!
நடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கண்டித்த சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions