தீபாவளி புயலிலும் அசராமல் நிற்கும் 'நானும் ரௌடிதான்'

Bookmark and Share

தீபாவளி புயலிலும் அசராமல் நிற்கும் 'நானும் ரௌடிதான்'

தீபாவளிக்கு முன்னதாக ஆயுத பூஜை தினத்தன்று வெளிவந்த படம் 'நானும் ரௌடிதான்'.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா முதன் முறையாக இணைந்து நடித்த இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டுக்களுடனும், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடனும் இன்று 25வது நாளைத் தொட்டுள்ளது.

தீபாவளிக்கு வெளிவந்த இரண்டு பெரும் நட்சத்திரங்களின் படங்களான 'வேதாளம், தூங்காவனம்' ஆகிய படங்களின் தாக்கத்திலும் 'நானும் ரௌடிதான்' தன்னிடத்தை இழக்காமல் தாங்கி நிற்கிறது.

இதுவரை சுமார் 25 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி இதுவரை நடித்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சிறப்பை இந்தப் படம் பெற்றுள்ளது. பல காதல் கிசுகிசுக்கள், சண்டை வதந்திகள் என பல விஷயங்களைக் கடந்து வந்து, இந்தப் படம் வெற்றியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் வெற்றியால் மீண்டும் விஜய் சேதுபதியை தன்னுடைய தயாரிப்பில் தனுஷ் நடிக்க வைக்க உள்ளார். இந்த ஆண்டில் வெளிவந்த வெற்றிப் படங்களில் 'நானும் ரௌடிதான்' படமும் முக்கிய படமாக அமைந்துவிட்டது.

'நானும் ரௌடிதான்' படக்குழுவினருக்கு தமிழ் ஸ்டார் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


Post your comment





Related News
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
நயன்தாரா காதலனை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்- இப்படி ஒரு சோதனையா?
மீண்டும் இணையும் நானும் ரௌடிதான் கூட்டணி!
தெலுங்கு போஸ்டர்களில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம்
தெருவில் பேண்ட்டை மடித்துவிட்டு இறங்கி வேலைபார்க்கும் பார்த்திபன்
நானும்ரவுடிதான் படத்தை ரீமேக் செய்ய கடும்போட்டி!
முதல் 5 இடத்தை பிடித்திருக்கும் படங்கள்: பாக்ஸ்ஆபிஸ் வசூல்
நானும்ரவுடிதான் இயக்குனரின் அடுத்த பட தலைப்பு?
சீயானை பின்னுக்கு தள்ளிய விஜய்!
அனிருத் சென்டிமெண்டால் வெற்றி பெற்ற நானும் ரவுடிதான்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions