நானும் ரவுடிதான் படப்பிடிப்பு முடிந்தது

Bookmark and Share

நானும் ரவுடிதான் படப்பிடிப்பு முடிந்தது

‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘நானும் ரவுடிதான்’. இதில் விஜய் சேதுபதி நாயகனாகவும் நயன்தாரா நாயகியாகவும் நடித்து வந்தனர். மேலும் இதில் பார்த்திபன், ராதிகா, பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.

பாண்டிச்சேரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் ஷூட்டிங் இன்று முடிவடைந்தது. இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறும்போது, ‘நானும் ரவுடிதான் படப்பிடிப்பு இன்றோடு முடிவடைந்தது. இந்த தருணத்தில் கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் என்னுடைய வழிகாட்டி மற்றும் தயாரிப்பாளர் தனுஷுக்கு எனது நன்றி’ என்று கூறியுள்ளார்.

மேலும் படக்குழுவினருடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்தையடுத்து படத்திற்கான பின்னணி வேலைகளை தொடங்கவுள்ளனர். 

படப்பிடிப்பின்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்ததாக வதந்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions