நானும்ரவுடிதான் இயக்குனரின் அடுத்த பட தலைப்பு?

Bookmark and Share

நானும்ரவுடிதான் இயக்குனரின் அடுத்த பட தலைப்பு?

நானும்ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ்சிவன், அடுத்து ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்காக இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கு முன்பணம் கொடுத்துவிட்டதாகக்கூடச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தில் மீண்டும் விஜயசேதுபதி நயன்தாரா ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள் என்றும் அது இரண்டுநாயகிகளைக் கொண்ட கதை என்பதால் இன்னொரு நாயகியாக த்ரிஷா நடிப்பார் என்றும் பேச்சு இருக்கிறது.

இன்னொருபக்கம் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விக்னேஷ்சிவன் படம் இயக்குவது மட்டும்தான் உறுதியான தகவல் என்றும்  நாயகன் நாயகி உட்பட மற்ற எல்லாமே பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் அதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அதேநேரம் தயாரிப்புநிறுவனத்தின் சார்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு தலைப்பு இந்தப்படத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அந்தத் தலைப்பு போறபோக்குல ரெண்டுகாதல் என்று சொல்லப்படுகிறது.

இதுவரை சொல்லப்பட்டுவரும் செய்திகளுக்கும் இந்தத்தலைப்புக்கும் பொருத்தம் சரியாக இருப்பதால் இதுவே படத்தின் பெயராக இருக்கும் வாய்ப்பு உள்ளதாகச் சொல்கின்றனர். விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
அதுக்கு டைம் இல்ல இதுக்கு மட்டும் இருக்கோ?: விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் சூர்யா ரசிகர்கள்
நயன்தாரா காதலனை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்- இப்படி ஒரு சோதனையா?
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
நயன்தாராவுக்காக சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்
நயன்தாரா காதலன் எடுத்த அதிரடி முடிவு- குழப்பத்தில் ரசிகர்கள்
மார்ச்-3 நயன்தாராவிற்கு அப்படி என்ன ஸ்பெஷல் நாள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions