நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் நடிகர் நாசர் பேச்சு

Bookmark and Share

நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் நடிகர் நாசர் பேச்சு

வருகிற 18–ந்தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளதால் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர், தமிழ்நாட்டிலுள்ள நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் காரைக்குடியில் உள்ள இயல், இசை, நாடக நடிகர் சங்கத்திற்கு வந்த அவர்கள், அதன் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர். 

அப்போது நாசர் பேசும்போது, “ நாடக நடிகர்களின் கனவு நிறைவேற பாண்டவர் அணி பாடுபடும். நாங்கள் எந்த நாடக நடிகர் சங்கத்திலும் கால் வைக்க முடியாது என எதிர் அணியினர் கூறினர். ஆனால் நாங்கள் ஒவ்வொரு நாடக நடிகர் சங்கத்துக்கும் சென்று வருகிறோம். 

அவர்கள் எங்களுக்கு வெளிப்படையான ஆதரவு தருகிறார்கள். நாங்கள் ஜெயித்தவுடன், நாடக நடிகர்களின் அடிப்படை வசதிகளான பொருளாதாரம், கல்வி வசதி மேம்பட பாடுபடுவோம். 

காரைக்குடியை மையமாக வைத்து வரும் படங்கள் வெற்றி பெறும் நிலையில், அதில் இங்குள்ள நாடக நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? என நிருபர்கள் கேட்டனர்.

நாடக நடிகர்களை கூட்டத்தோடு கூட்டமாக நடிக்க வைத்து அவமானப்படுத்த முடியாது. அவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி அளித்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும்” இவ்வாறு அவர் பேசினார். 

 


Post your comment





Related News
பாண்டவர் அணியில் விரிசல் – பிரபல நடிகர் விலகல்!
வயதானவருக்கு மூன்று சக்கர வண்டி வழங்கிய நடிகர் சங்கம்
நாசர் வெற்றி பெற்று நடிகர் சங்கத் தலைவரானார்!
கமலஹாசன் தூண்டுதல் இல்லை: நாசர் விளக்கம்
சரத்குமாருக்கு- 2, நாசருக்கு- 1, ராதாரவிக்கு- 1, விஷாலுக்கு- 3: தேர்தல் சின்னங்கள்!
தலைவர் நாசர்! செயலாளர் விஷால்!! பொருளாளர் கார்த்தி!!!
திடீர் உடல் நல குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் நாசர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions