கமலஹாசன் தூண்டுதல் இல்லை: நாசர் விளக்கம்

Bookmark and Share

கமலஹாசன் தூண்டுதல் இல்லை: நாசர் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 18–ந் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமார் மீண்டும் தலைவர் பதவிக்கும், பொதுச் செயலாளர் ராதாரவி மீண்டும் அதே பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். 

சரத்குமாரை எதிர்த்து தலைவர் பதவிக்கு நடிகர் நாசரும், ராதாரவியை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் விஷாலும் போட்டியிடுகிறார். இரு தரப்பினரும் தீவிரமாக நடிகர்– நடிகைகள், நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள். 

அரசியல் கட்சிகளை மிஞ்சும் அளவுக்கு நடிகர் சங்க தேர்தல் சூடு பிடித்துள்ளது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

இதற்கிடையே தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசர் அளித்த பேட்டியில், “நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவதில் கமலஹாசன் தூண்டுதல் எதுவும் கிடையாது. அவர் எனது நண்பர். 

அவரது படங்களில் நான் தொடர்ந்து நடிப்பதால் தூண்டி விட்டதாக கூற முடியாது. அவரது படத்தில் வரும் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்கிறார்.

இந்த தேர்தலில் பின் விளைவுகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. விஷால், கார்த்தி, பொன்வண்ணன் ஆகியோர் எந்த பிரதிபலனும் இல்லாமல் அர்ப்பணிப்புடன் தேர்தலில் நிற்கிறார்கள். இவ்வாறு நாசர் கூறினார். 

இந்த தேர்தலில் நடிகர் கமலஹாசன் தூண்டுதலின் பேரில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக கூறப்படுகிறதே? என்று நாசரிடம் கேட்கப்பட்டது. 


Post your comment





Related News
பாண்டவர் அணியில் விரிசல் – பிரபல நடிகர் விலகல்!
வயதானவருக்கு மூன்று சக்கர வண்டி வழங்கிய நடிகர் சங்கம்
நாசர் வெற்றி பெற்று நடிகர் சங்கத் தலைவரானார்!
சரத்குமாருக்கு- 2, நாசருக்கு- 1, ராதாரவிக்கு- 1, விஷாலுக்கு- 3: தேர்தல் சின்னங்கள்!
நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் நடிகர் நாசர் பேச்சு
தலைவர் நாசர்! செயலாளர் விஷால்!! பொருளாளர் கார்த்தி!!!
திடீர் உடல் நல குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் நாசர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions