படத்துக்காக வீட்டை விற்ற இயக்குனர்

Bookmark and Share

படத்துக்காக வீட்டை விற்ற இயக்குனர்

பல நூல்களை எழுதியவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். அரசியல் கட்சியில் இருந்தாலும் கதை சேவையிலும் ஈடுபட மனம் வைத்து நதிகள் நனைவதில்லை என்ற படத்தை எடுத்தார்.

ஆனால் படம் படமாக இருந்ததா என்பதை அறிய படம் திரைக்கு வந்த பின்புதான் அவராலே அறிய முடிந்தது. படத்தில் குத்து பாட்டு நாயகி ரிஷாவை ஹீரோயினாக ஆக்கிய பெருமையை மட்டும் அன்பழகன் பெற்றுருக்கிறார்.

மற்றபடி பெரிதாக எதுவும் இல்லை. நதிகள் நனைவதில்லை தலைப்புக்கு இன்றைய நிலையில் நம் நாட்டில் வறண்டு கிடக்கும் நதிகளை பற்றி எடுத்திருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்.

இந்த படத்துக்காக தி.நகரில் உள்ள தன் சொந்த வீட்டை விற்றுவுள்ளார். மறுபடியும் அடுத்த படம் எடுக்கவும் திட்டமிட்டுருக்கிறாராம். ஆனால் அந்த படத்தில் ரிஷா நாயகி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions