நடிகைகளுக்கு இளமையான தோற்றம் ஒரு வரம்: நதியா

Bookmark and Share

நடிகைகளுக்கு இளமையான தோற்றம் ஒரு வரம்: நதியா

முழுக்க முழுக்க பெண்களே நடித்து, ‘திரைக்கு வராத கதை’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை துளசிதாஸ் டைரக்‌ஷனில், கே.மணிகண்டன் தயாரித்து இருக்கிறார். நதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி, ஈடன், ரேஷ்மா, சுபிக்‌ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.

நடிகர்கள் ஸ்ரீகாந்த், சரவணன், நடிகைகள் இனியா, ஈடன், ஆர்த்தி, தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் கதிரேசன், தயாரிப்பாளர்கள் கில்டு செயலாளர் ஜாகுவார் தங்கம், பட அதிபர்கள் ‘கலைப்புலி’ ஜி.சேகரன், பி.டி.செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

விழாவில், நடிகை நதியா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“நான், நிறைய படங்களில் நடிப்பதில்லை. பிடித்த கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கிறேன். 1984-ல் நடிக்க வந்தேன். இத்தனை வருடங்களில் இப்போதுதான் 50-வது படத்தை நெருங்கியிருக்கிறேன். ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் இடைவெளி இருப்பதை தவறாக புரிந்து கொண்டு, நதியா மீண்டும் நடிக்க வந்து விட்டார் என்று சொல்வது சரியல்ல.

நான் நடித்ததில், ‘பூவே உனக்காக,’ ‘உயிரே உனக்காக,’ ‘மங்கை ஒரு கங்கை,’ ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி,’ ‘தாமிரபரணி’ போன்றவைகளை மறக்க முடியாத படங்கள் என்று கூறலாம். முழுக்க முழுக்க பெண்களே நடித்துள்ள ‘திரைக்கு வராத கதை’ படத்தில், ஒரு சமூக அக்கறை இருந்தது. வித்தியாசமான கதை. இதில், போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறேன்.

நடிகர்களுக்கு வயது வரம்பு கிடையாது. நடிகைகளுக்கு வயது ஒரு தடையாக அமைந்து விடுகிறது. அதையும் தாண்டி, நடிகைகளுக்கு இளமையான தோற்றம், ஒரு வரம். நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். நன்றாக சாப்பிடுகிறேன். ஆனால், நிறைய சாப்பிட மாட்டேன். வேறு ரகசியம் எதுவும் என்னிடம் இல்லை.

என் மகள்கள் இருவரும் வளர்ந்து விட்டார்கள். மூத்த மகள் சனா கல்லூரியில் பட்டப்படிப்பு (2-ம் வருடம்) படிக்கிறாள். இளைய மகள் ஜானா, 10-ம் வகுப்பு படிக்கிறாள். இரண்டு பேருமே அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நானும், கணவரும் மும்பையில் வசிக்கிறோம்.

நான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் நிறைய வந்தன. பின்னர் அந்த நிலை மாறியது. கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள் வரவில்லை. அதில், ஒரு இடைவெளி விழுந்தது. இப்போது மீண்டும் கதாநாயகியை மையப்படுத்திய படங்கள் வர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, இந்தி பட உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த வயதில் நடிப்பதற்கு நிறைய கதைகள் இருக்கிறது. ரசிகர்கள் பார்க்க தயாராக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள், ‘ரிஸ்க்’ எடுத்துக் கொண்டு நல்ல கதைகளை படமாக்க முன்வர வேண்டும். நான், ஒரு சோம்பேறி. நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. நல்ல கதாபாத்திரங்கள் என்னை தேடி வந்தால் மட்டுமே நடிக்கிறேன்.”

இவ்வாறு நதியா கூறினார். 


Post your comment

Related News
முதிர்ந்த வயதில் இளமையாக திகழும் ரகசியத்தை உடைத்த நதியா
நதியா படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு
தனுஷ், கார்த்தியுடன் மோதும் நதியா
ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை
தனுஷின் பவர் பாண்டி பாதி முடிந்தது!
தனுஷ் பட நாயகி முடிவானார்!
நடிகை என்பதை விட குடும்ப தலைவி என்பதை பெருமையாக கருதுகிறேன்: நதியா
ராம் சரணின் அம்மாவாக நதியா...?
ப்ரூஸ்லீயில் மீண்டும் நதியா
நரைமுடி வேடத்தில் நடிக்க மறுத்த நதியா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions