நரைமுடி வேடத்தில் நடிக்க மறுத்த நதியா!

Bookmark and Share

நரைமுடி வேடத்தில் நடிக்க மறுத்த நதியா!

1980-90களில் முக்கிய நாயகியாக திகழ்ந்தவர் நதியா. பெண்கள் மத்தியில் அவருக்கு பெரிய வரவேற்பு இருந்ததால் அவரது பெயரிலேயே நதியா வளையல், நதியா கம்மல் என்று அழகு சாதனப் பொருட்களுக்கு அவரது பெயரை வைத்தனர்.

மேலும், முன்னணி ஹீரோக்களின் படமே என்றாலும் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கண்டிசன் போட்டு அந்த காலகட்டத்தில் நடித்து வந்தார் நதியா. அப்படிப்பட்டவர் திருமணத்திற்கு பிறகு சிலகாலம் சினிமாவில் இருந்து வெளியேறியவர், ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்திலிருந்து மறுபிரவேசம் செய்தார்.

தொடர்ந்து தாமிரபரணி, சண்டை, பட்டாளம் ஆகிய படங்களிலும் நடித்தார். ஆனால் தொடர்ந்து தமிழில் நதியாவுக்கு வாய்ப்புகள் இல்லை. அதனால் மலையாளம், தெலுங்கு என்று நடித்து வந்த நதியா, த்ருஷ்யம் தெலுங்கு ரீமேக்கில் கீதா பிரபாகர் என்ற போலீஸ் வேடத்தில் அசத்தலாக நடித்திருந்தார்.

ஆனால் அதையடுத்தும் அவர் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாகவும் இருந்து வருகிறார். இந்தநிலையில், சமீபத்தில் ஒரு தெலுங்கு டைரக்டர், ஒரு ஐம்பது வயது பெண்ணாக அதாவது நரை முடி தலையுடன் நடிக்க வேண்டும் என்று நதியாவை அழைத்தபோது செம கோபமாகி விட்டாராம்.

என்னதான் எனக்கு 48 வயது ஆனபோதும், இப்போதும் நான் எனது உடல்கட்டை இளவட்டமாகவே பராமரித்து வருகிறேன். காரணம் இளமையான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

அதனால் எனது ஒரிஜினல் வயதை வெளிப்படுத்தும் வேடங்களில் ஒருநாளும் நான் நடிக்க மாட்டேன் என்று அந்த வாய்ப்பை தட்டிக்கழித்து விட்டாராம் நதியா.

 


Post your comment





Related News
முதிர்ந்த வயதில் இளமையாக திகழும் ரகசியத்தை உடைத்த நதியா
நதியா படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு
தனுஷ், கார்த்தியுடன் மோதும் நதியா
ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை
தனுஷின் பவர் பாண்டி பாதி முடிந்தது!
நடிகைகளுக்கு இளமையான தோற்றம் ஒரு வரம்: நதியா
தனுஷ் பட நாயகி முடிவானார்!
நடிகை என்பதை விட குடும்ப தலைவி என்பதை பெருமையாக கருதுகிறேன்: நதியா
ராம் சரணின் அம்மாவாக நதியா...?
ப்ரூஸ்லீயில் மீண்டும் நதியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions