ப்ரூஸ்லீயில் மீண்டும் நதியா

Bookmark and Share

ப்ரூஸ்லீயில் மீண்டும் நதியா

பிரபல முன்னாள் கதாநாயகியான நதியா டோலிவுட்டில் மிர்ச்சி படம் மூலம் தனது செகண்ட் இன்னிங்க்சை தொடங்கினார். அதன் பிறகு  பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்த வெற்றி படமான  அத்தாரிண்டிகி தாரேதியில் ஒரு  முக்கியமான கேரக்டரிலும், விக்டரி வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்த திரிஷ்யம் படத்தில் போலீஸ் ஆபீசர் கேரக்டரிலும்  நடித்து மறுபடியும் தனகென்று ஒரு முத்திரையை  பதித்தவர்  நதியா.

தற்போது மெகா பவர்ஸ்டார் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் புதுப்படமான ப்ரூஸ்லீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ராம் சரண் ஸ்டண்ட் மேன் கேரக்டரில் நடிக்கிறார்.

டி.வி.வி. எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பாக தானைய்யா தயாரிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஸ்ரீனு  வைட்ல இயக்குகிறார்.  இந்த படத்தில் ராம் சரண் ஜோடியாக ராகுல் ப்ரீத்  சிங், தங்கையாக கிருதி கந்தர்பா நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளரான தமன் இசை அமைப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் அக்டோபர் 15ம் தேதி தசரா பண்டிகையையொட்டி இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். 


Post your comment





Related News
முதிர்ந்த வயதில் இளமையாக திகழும் ரகசியத்தை உடைத்த நதியா
நதியா படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு
தனுஷ், கார்த்தியுடன் மோதும் நதியா
ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை
தனுஷின் பவர் பாண்டி பாதி முடிந்தது!
நடிகைகளுக்கு இளமையான தோற்றம் ஒரு வரம்: நதியா
தனுஷ் பட நாயகி முடிவானார்!
நடிகை என்பதை விட குடும்ப தலைவி என்பதை பெருமையாக கருதுகிறேன்: நதியா
ராம் சரணின் அம்மாவாக நதியா...?
நரைமுடி வேடத்தில் நடிக்க மறுத்த நதியா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions