நடிகர் சங்க செயற்குழு நாளை கூடுகிறது

Bookmark and Share

நடிகர் சங்க செயற்குழு நாளை கூடுகிறது

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் முயற்சியில் புதிய நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் மீது அதிருப்தியாளர்கள் குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சங்கம் எதிரில் அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தம் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் கூறினார்கள். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் அளித்த கணக்கு விவரங்கள் முறையாக இல்லை என்றும் அதில் முறைகேடு நடந்து இருப்பதாகவும் புதிய நிர்வாகிகள் குற்றம் சாட்டினார்கள். முன்னாள் நிர்வாகிகளை நடிகர் சங்கத்தில் இருந்தும் நீக்கினார்கள். இதனை எதிர்த்து நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழ் நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை (9-ந் தேதி) நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ராஜேஷ், எஸ்.வி.சேகர், மனோபாலா, பூச்சி முருகன், ராம்கி, உதயா, டி.பி.கஜேந்திரன், நளினி, நிரோஷா, சோனியா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் நடிகர் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக புகார் கூறி வரும் வாராகி உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. கூடுவாஞ்சேரி அருகில் உள்ள வேங்கட மங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக இருந்த 26 சென்ட் நிலம் விற்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கும்படி ராதாரவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூடும் தேதியும் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. அடுத்த மாதம்(நவம்பர்) முதல் வாரத்தில் நடிகர் சங்க பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.
நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரணம் - சோகத்தில் திரையுலகம்
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions